உள்துறை அமைச்சர் அமித்ஷா போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அனைத்து மாநில போலீஸ் உயர் அதிகாரிகளுடன் நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார்.மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலங்களின் காவல்துறை தலைவர்கள், யூனியன் பிரதேசங்களின் உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். நாட்டின் பாதுகாப்பு நிலவரம், சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு
Amitshah, India, Safety, Police Officer, Meeting, இந்தியா, பாதுகாப்பு, போலீஸ் அதிகாரிகள், மத்திய உள்துறை, அமைச்சர், அமித்ஷா, ஆலோசனை,

புதுடில்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அனைத்து மாநில போலீஸ் உயர் அதிகாரிகளுடன் நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் மாநிலங்களின் காவல்துறை தலைவர்கள், யூனியன் பிரதேசங்களின் உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர். நாட்டின் பாதுகாப்பு நிலவரம், சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு பணிகளில் போலீஸாரிடையே ஒருங்கிணைப்பு ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.


latest tamil news


மேலும், சமீபகாலமாக காஷ்மீரில் அப்பாவி மக்களை பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்கி வருகின்றனர். வெளிமாநில மற்றும் புலம்பெயர்ந்து வந்த தொழிலாளர்களையும் சுட்டுக் கொன்று வருகின்றனர். பீஹாரைச் சேர்ந்த 2 தொழிலாளர்களை இரண்டு நாட்களுக்கு முன் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.

காஷ்மீரில் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள், டில்லியின் எல்லைப் பகுதிகள் மற்றும் உ.பி.,யில் விவசாயிகளின் போராட்டம் ஆகியவை குறித்தும் போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. போலீஸார் விழிப்புடன் செயல்பட்டு சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டும். பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்க வேண்டும் என்றும் அமித் ஷா அறிவுறுத்தியதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-அக்-202121:44:40 IST Report Abuse
சம்பத் குமார் 1). தென் இந்தியாவுக்கும் டெல்லிக்குப் வெகு தொலைவில் இருப்பதால் எங்களை கண்டுக்க மாட்டேன் என்று இருக்கீங்களே எஜமான்.2).மூன்று மாதற்கு ஒரு முறை திக்விஜயம் செய்தால் பரவாயில்லை. கவர்னர்களுக்கு கொஞ்சம் பொறுப்புகள் கொடுத்தால் பரவாயில்லை. 3). ஒரே புயல் வெள்ளம், தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரர், anti Indians தொந்தரவு, என்று தினம்தினம் வாழ்கிறோம்.4). சொல்லபோனால் சுதந்திரம் இல்லாமல் இருக்கிறோம்.5). பாத்து ஏதாவது செய்யுங்க எஜமான். நன்றி ஐயா. ஹரி ஓம்.
Rate this:
Cancel
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
19-அக்-202115:40:29 IST Report Abuse
திரு.திருராம் இந்தியாவில் உள்ள எல்லா மாநில அரசுகளுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு நிலம் காசுமீரில் இலவசமாக ஒதுக்கவேண்டும், அந்த அந்த மாநில மக்கள் அந்த அந்த மாநில பாதுகாப்பு போலீஸ் பந்தோபஸ்துகளுடன் காசுமீரில் குடியேறவேண்டும், அதாவது இப்போதுள்ள காசுமீர் மக்களில் மக்கள்தொகையை இரண்டுமடங்காக மற்ற மாநிலத்தவரையும் சேர்த்து ஒரே நேரத்தில் உயர்த்தவேண்டும், ஒரு சிலர் என்றால் எளிதில் டார்கெட் செய்யப்படுவர். பாதிக்கு பாதி என்னும்போது எதிர்வினை என்ற பயம் வருமல்லவா?
Rate this:
Cancel
Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா
19-அக்-202111:37:20 IST Report Abuse
Raj ஏதோ பெரிய திட்டம் நடக்க போகிறது?
Rate this:
Azhagiri - Chennai,இந்தியா
19-அக்-202113:52:08 IST Report Abuse
Azhagiriஉன்னை பிடித்து கேட்டல், எல்லா திட்டமும் வெளிவரும். NSAவிற்கு உன்னைபோன்ற தேசத்துரோகிகளை பிடிக்க விவரம் தெரிவிக்கப்படும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X