மழையில் தத்தளிக்கும் உத்தர்கண்ட்: 23 பேர் பலி; பலர் மாயம்

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
டேராடூன்: தொடர்ந்து 3வது நாளாக பெய்து வரும் மதழ காரணமாக உத்தர்கண்ட் மாநிலம் தத்தளித்து வருகிறது. மழை தொடர்புடைய சம்பவங்கள் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. பலர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.உத்தரகண்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக, கேதார்நாத், பத்ரிநாத் கோவில்களுக்கு செல்ல
uttarkhand,cloudburst, உத்தர்கண்ட், மேகவெடிப்பு

டேராடூன்: தொடர்ந்து 3வது நாளாக பெய்து வரும் மதழ காரணமாக உத்தர்கண்ட் மாநிலம் தத்தளித்து வருகிறது. மழை தொடர்புடைய சம்பவங்கள் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. பலர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

உத்தரகண்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக, கேதார்நாத், பத்ரிநாத் கோவில்களுக்கு செல்ல ஹரித்வார், ரிஷிகேஷ் வந்துள்ள பக்தர்கள் பயணம் மேற்கொள்ள தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இமயமலை அடிவார பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு வாகனங்களில் செல்ல தடை உள்ளது. மயுனோத்ரி செல்வோர் பட்கோட்டிலும், கங்கோத்ரி செல்வோர் ஹரிசிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். சிம்கல் பகுதியில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் கட்டுமான பணிக்காக கூடாரத்தில் தங்கியிருந்த நேபாளத்தை சேர்ந்த மண்ணில் புதைந்த இரு தொழிலாளர்கள் உட்பட 5 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்துள்ளனர்.
முக்தேஷ்வர் மற்றும் கைரானா பகுதியில் வீடுகள் இடிந்து ஏழுபேரும், உதமசிங் நகர் பகுதியில் வெள்ள்தில் அடித்து செல்லப்பட்டு ஒருவர் உட்பட இன்று 11 பேர் உயிரிழந்துள்ளனர்.


latest tamil news
முதல்வர் ஆய்வு


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் புஷ்கர் சிங் தமி, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து பார்வையிட்டனர். பின்னர் முதல்வர் கூறியதாவது: மாநிலத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் விளக்கி உள்ளோம். பாலங்கள் மற்றும் வீடுகள் மழை காரணமாக சேதம் அடைந்துள்ளன. இதுவரை 23 பேர் பலியாகி உள்ளனர். மீட்பு பணியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.


மேகவெடிப்பு


இந்நிலையில், நைனிடால் மாவட்டத்தில் உள்ள ராம்கார்க் கிராமத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கனமழை ஏற்பட்டதன் காணமாக ஏற்பட்ட இடிபாடுகளில் கிராம மக்கள் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு போலீசார், மாவட்ட நிர்வாகம் மற்றும் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-அக்-202121:21:36 IST Report Abuse
சம்பத் குமார் மழை வெள்ளத்தால் பாதிக்கபட்டுள்ள உத்தர்காண்ட் மாநில நமது சகோதரர்கள் இந்த பிரச்சினையில் இருந்து விரைவில் மீண்டு வர பிராத்தனை செய்கிறோம்.நன்றி ஐயா. ஹரி ஓம்.
Rate this:
Cancel
Murali - chennai,இந்தியா
19-அக்-202111:35:56 IST Report Abuse
Murali Some narrow minded people commented worst about our neighbouring state kerala during the recent flood and attributed this calamity is due to Lord Aiyyappa"s anger on keratitis and its CM. So it looks like Lord Shiva very often getting angry on Jharkand people and it's CM.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X