பொது செய்தி

இந்தியா

தொடரும் கனமழை: உச்சம் தொடும் காய்கறி விலை

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி: நாட்டில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரி பொருட்களின் விலை உச்சத்தை எட்டியுள்ளது. அதேவேளையில், பல்வேறு மாநிலங்களில் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பயிர்கள் நாசமாகி, விளைபொருள்கள் சந்தைக்கு வராமலேயே அழுகுகின்றன; காய்கறி வரத்துக் குறைவால், விலை கடுமையாக உயர்ந்துள்ளது.வட இந்தியாவில் குறிப்பாக உத்தரப்

புதுடில்லி: நாட்டில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரி பொருட்களின் விலை உச்சத்தை எட்டியுள்ளது. அதேவேளையில், பல்வேறு மாநிலங்களில் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பயிர்கள் நாசமாகி, விளைபொருள்கள் சந்தைக்கு வராமலேயே அழுகுகின்றன; காய்கறி வரத்துக் குறைவால், விலை கடுமையாக உயர்ந்துள்ளது.



latest tamil news



வட இந்தியாவில் குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் மட்டும் காய்கறிகளின் விலை பெரிய அளவில் உயராமல் உள்ளது. ஆனால் அங்கும், தக்காளியின் விலை கிலோவுக்கு 60 ரூபாயை எட்டியுள்ளது. கோல்கட்டாவில் தக்காளி விலை கிலோவுக்கு 90 - 93 ரூபாய் வரை விற்பனையானது. கத்திரிக்காய் கிலோ 60ல் இருந்து 100 ரூபாயை தொட்டுள்ளது.இதுகுறித்து காய்கறி வியாபாரிகள் தெரிவித்து உள்ளதாவது:


latest tamil news



தொடர் மழை பயிர்கள் நாசமாகி வருகின்றன. சந்தைக்கு காய்கறி வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. சந்தைகளிலேயே காய்கறிகளின் விலைகள் 15 முதல் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. பண்டிகைக் காலமும் நெருங்குவதால் இந்த விலை தொடர்ந்து உயருமே தவிர, குறைய வாய்ப்பில்லை. எரிபொருள் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. காய்கறி கடை நடத்தும் வியாபாரிகள், சந்தையில் இருந்து மொத்தமாக காய்கறிகளை வாங்கி வந்து வியாபாரம் செய்வர். அவர்களுக்கான போக்குவரத்து செலவும் 20 - 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இதனால், காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-அக்-202117:27:13 IST Report Abuse
kulandai kannan விவசாயிகள் மகிழ்ச்சி!!
Rate this:
Cancel
Yesappa - Bangalore,இந்தியா
19-அக்-202114:29:55 IST Report Abuse
Yesappa விடியல் ஆட்சிக்கு பிறகு தமிழ் நாட்டில் சிமெண்ட் , மணல் மற்றும் செங்கல் விலை அதிகம். என்ன காரணம்?
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
19-அக்-202113:55:51 IST Report Abuse
Dhurvesh மோடி இப்போ இந்த காய்கறிக்கும் GST போட்டுவிட்டால் என்று யோசித்து கொண்டு இருப்பர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X