இரு விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி பேசவே மாட்டார்: ஓவைசி

Added : அக் 19, 2021 | கருத்துகள் (82)
Share
Advertisement
ஐதராபாத்: ‛‛பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்தும், சீனா குறித்தும் பிரதமர் மோடி எப்போதும் பேச மாட்டார்,'' என ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் ஓவைசி விமர்சித்துள்ளார்.இது தொடர்பாக ஐதராபாத்தில் நடந்த கூட்டத்தில் ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி பேசியதாவது: பிரதமர் மோடி நாட்டில் அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்தும், லடாக்கில் சீனாவின் ஆக்கிரமிப்பு
PM Modi, Never Speaks, Two Things, Asaduddin Owaisi, Silence, China, JK, Killings, பிரதமர், மோடி, பெட்ரோல், டீசல், சீனா, ஓவைசி,

ஐதராபாத்: ‛‛பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்தும், சீனா குறித்தும் பிரதமர் மோடி எப்போதும் பேச மாட்டார்,'' என ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் ஓவைசி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக ஐதராபாத்தில் நடந்த கூட்டத்தில் ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி பேசியதாவது: பிரதமர் மோடி நாட்டில் அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்தும், லடாக்கில் சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்தும் பிரதமர் மோடி எப்போதும் பேசமாட்டார்.


latest tamil news


ஜம்மு காஷ்மீரில் நமது வீரர்கள் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் அக்.,24ல் இந்திய கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுடன் ‛டுவென்டி-20' உலககோப்பையில் விளையாட உள்ளது. நமது வீரர்களின் உயிரில் ஒவ்வொரு நாளும் பாகிஸ்தான் ‛டுவென்டி-20' விளையாடுகிறது. பீஹார் மாநிலத்தின் ஏழை தொழிலாளர்கள் குறிவைத்துக் கொல்லப்பட்டனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்குக் கீழ் இருக்கும் உளவுத்துறை என்ன செய்கிறது?. இது மத்திய அரசின் தோல்வியைக் குறிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (82)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dina - chennai,இந்தியா
22-அக்-202120:20:04 IST Report Abuse
dina திரு மோதி அவர்கள் பேச வில்லை என்றல் பரவாயில்லை நீங்கள் பேசிவிட்டு போங்கள் நீங்களும் இந்தியர் தானே ......
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
22-அக்-202111:50:11 IST Report Abuse
Thiagarajan Kodandaraman நம்ம நாடு ஜெயிச்சதா இல்ல இந்தியா ஜெயிச்சதா என்று இன்று கிரிக்கெட்டில் கேட்க்கும் உங்க கூட்டத்துக்கு என்ன சொல்ல போறீங்க மாண்புமிகு இந்திய எம்பீ அவர்களே
Rate this:
Cancel
JS -  ( Posted via: Dinamalar Android App )
20-அக்-202107:20:31 IST Report Abuse
JS PLEASE DON'T REPEAT THE SAME COMMENT
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X