லக்கிம்பூர் வன்முறை சம்பவம்; மேலும் 4 பேர் கைது

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
லக்னோ: லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.உத்தரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கெரியில் கடந்த அக்.,3ம் தேதி விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது கார் மோதியதால் வன்முறை வெடித்தது. இதில், 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக
Lakhimpur Kheri, Violence, Four Arrested, BJP Worker, லக்கிம்பூர், வன்முறை, 4 பேர், கைது

லக்னோ: லக்கிம்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

உத்தரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கெரியில் கடந்த அக்.,3ம் தேதி விவசாயிகள் நடத்திய போராட்டத்தின்போது கார் மோதியதால் வன்முறை வெடித்தது. இதில், 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஆஷிஷ் மிஸ்ரா மற்றும் அவரது ஆதரவாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இவ்வழக்கு தொடர்பாக சிலரையும் போலீசார் கைது செய்தனர்.


latest tamil news


இந்நிலையில், வன்முறை சம்பவம் தொடர்பாக மேலும் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களில் ஒரு நபரான சத்ய பிரகாஷ் திரிபாதி என்பவரிடம் தோட்டாக்களுடன் கூடிய கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 10 ஆனது. கைது செய்யப்பட்டவர்களிடம் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
19-அக்-202123:09:22 IST Report Abuse
Aarkay போராட்டம் என்ற பெயரில், கூட்டம் கூடி சாலையை மறித்து அவ்வழியே செல்லும் வாகனங்களை மறித்து அராஜகம் செய்யும் விஷமிகள் தண்டிக்கப்படவேண்டியவர்கள். கூட்டங்களுக்கும், போராட்டங்களுக்கும், சாலை மரியாளுக்கு, ஊர்வலங்களும் அனுமதி மறுக்கப்படவேண்டும். ஜனநாயகம் என்ற பெயரில் அதீத சுதந்திரம் கொடுத்து, தடியெடுத்தவனையெல்லாம் தண்டல்காரனாக்கி விட்டோம். விமர்சனங்கள், அதிருப்தி இருப்பின் இயக்கங்கள் நீதிமன்றங்களை நாடட்டும். இப்படி பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் போராட்டங்களை இனியும் அனுமதிக்கக்கூடாது.
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
19-அக்-202114:21:00 IST Report Abuse
raja அந்த ஒருவறு விவசாயி.. (தரகன்)?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X