பொது செய்தி

தமிழ்நாடு

மொழி பிரச்னையை கிளப்பிய சொமேட்டோ: எதிர்ப்புக்குப் பின் பணிந்தது

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (114)
Share
Advertisement
சென்னை: சொமேட்டோ நிறுவன அதிகாரி ஒருவர் மொழி பிரச்னையை கிளப்பியதை அடுத்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், எதிர்ப்புக்கு பணிந்து மன்னிப்புக் கோரி தமிழில் சொமேட்டோ நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் உணவு டெலிவரி சேவை நிறுவனங்களில் ஒன்று சொமேட்டோ நிறுவனம். சொமேட்டோ நிறுவனத்தின் செயலி மூலமாக உணவு பொருட்களை ஆர்டர் செய்த நபரிடம்,
Zomato, Apologies, Tamil, Tamilnadu, Reject_Zomato, Hindi, சொமேட்டோ, மன்னிப்பு, பணிந்தது, தமிழ், ஹிந்தி, இந்தி,

சென்னை: சொமேட்டோ நிறுவன அதிகாரி ஒருவர் மொழி பிரச்னையை கிளப்பியதை அடுத்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்நிலையில், எதிர்ப்புக்கு பணிந்து மன்னிப்புக் கோரி தமிழில் சொமேட்டோ நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் வேகமாக வளர்ந்துவரும் உணவு டெலிவரி சேவை நிறுவனங்களில் ஒன்று சொமேட்டோ நிறுவனம். சொமேட்டோ நிறுவனத்தின் செயலி மூலமாக உணவு பொருட்களை ஆர்டர் செய்த நபரிடம், ஹிந்தி மொழி தொடர்பாக சொமேட்டோ நிறுவன அதிகாரி ஒருவர் அளித்த பதில் இணையத்தில் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழகத்தை சேர்ந்த விகாஷ் என்பவர் நேற்று (அக்.,18) சொமேட்டோ செயலி மூலமாக உணவு ஆர்டர் செய்துள்ளார். ஆனால், அவருக்கு கிடைத்த உணவுப்பொருளின் அளவு குறைந்து காணப்பட்டதால், அச்செயலியின் வாயிலாக சொமேட்டோ நிறுவன வாடிக்கையாளர் மையத்தை அணுகி பணத்தை திரும்ப கேட்டுள்ளார்.


latest tamil news


அப்போது பதிலளித்த சொமேட்டோ அதிகாரி, ‛ஹிந்தியில் பிரச்னையை விளக்கமுடியவில்லை. ஒரு இந்தியராக இருந்துகொண்டு இந்தியாவின் தேசிய மொழியான ஹிந்தி தெரியாமல் எப்படி இருக்கிறீர்கள்?' என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்த உரையாடலை டுவிட்டர் தளத்தில் விகாஷ் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன் சமூக வலைதளங்களில் பலரும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர். மேலும், சொமேட்டோ செயலியை பலரும் அன்இன்ஸ்டால் செய்துவிட்டனர். கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அந்நிறுவனத்தின் பங்குகளும் பெருமளவு சரிவை சந்தித்தன.

மொழி பிரச்னை ஏற்பட்டதை அடுத்து சொமேட்டோ நிறுவனம் தமிழில் மன்னிப்புக் கோரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‛வணக்கம் தமிழ்நாடு! .... எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம் தேசத்தின் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர்கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளோம். பணிநீக்கம் என்பது சரியான நெறிமுறை என நம்புகிறோம். மேலும் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக கருத்தைப் பகிரக்கூடாது எனத் தெளிவாக நாங்கள் எங்கள் முகவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கிறோம்,' எனத் தெரிவித்துள்ளது.


சொமேட்டோ நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (114)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
19-அக்-202122:26:49 IST Report Abuse
J.Isaac Jayachandran Ramachandran/ coimbatore: அவர்களே ஹிந்தி விருப்பபட்டு கற்று கொள்ளுவதை பற்றி சொல்லவில்லை. கிட்டத்தட்ட 50ஆண்டுகளாக சிவகாசியில் தொழில் செய்பவர்கள் ஹிந்தி பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஹிந்தி திணிப்பை தான் எதிர்க்கிறார்கள். தென் மாநிலங்களில் கட்டாயமாக திணிக்க மறைமுகமாக திட்டங்களை செயல்படுத்துவது தான் தவறு. இப்போது சமஸ்கிருதத்தையும் சேர்த்து கொண்டார்கள்.
Rate this:
Cancel
Venkatakrishnan - Mumbai,இந்தியா
19-அக்-202121:48:53 IST Report Abuse
Venkatakrishnan வடநாட்டு சங்கிகளுக்கு இன்னும் தேசியமொழி என்ற ஒன்று இல்லை என்பதே தெரிவதில்லை.... அப்படி ஒரு அடிப்படை அறிவு.... அப்பறோம் ஏன் மோடிக்கு வோட்டு போட மாட்டார்கள்...
Rate this:
Cancel
Desi - Chennai,இந்தியா
19-அக்-202121:09:54 IST Report Abuse
Desi Hindi is not national language. It is one of the official languages of India.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X