பொது செய்தி

தமிழ்நாடு

மதுரை, சேலம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021
Share
Advertisement
சென்னை: சேலம், புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகஇன்று அக்.,19ம் தேதி: சேலம், புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம்
HeavyRain, Weather, IMD, Madurai, Selam, Ramanathapuram, Weather Report, Announce, சேலம், மதுரை, புதுகை, ராமநாதபுரம், கனமழை பெய்யும், வானிலை ஆய்வுமையம், தகவல்,

சென்னை: சேலம், புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:


தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக



latest tamil news


இன்று அக்.,19ம் தேதி: சேலம், புதுக்கோட்டை, மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, துாத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, நாகப்பட்டினர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலுார், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

நாளை 20 மற்றும் 21ம் தேதி: தென்மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் (கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலுார், பெரம்பலுார், தேனி, திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.


latest tamil news


அக்., 22ம் தேதி: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய (கோவை, நீலகிரி) மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் (நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர்) மற்றும் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அக்.,23ம் தேதி: வேலுார், திருப்பத்துார், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி, அரியலுார், பெரம்பலுார், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.


latest tamil news




சென்னையை பொறுத்தவரை:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைஅளவு:


திருபுவனம் (சிவகங்கை) 7 செ.மீ., கிளநிலை (புதுகை) 4 செ.மீ., நாமக்கல் 3 செ.மீ., வீரகனுார் அணைக்கட்டு (மதுரை), அறந்தாங்கி (புதுகை), சின்னக்கல்லார் (கோவை), காரைக்கால், வால்பாறை (கோவை), சின்கோனா (கோவை), ஜெயங்கொண்டம் (அரியலுார்) தலா 2 செ.மீ.,


latest tamil news



மீனவர்களுக்கான எச்சரிக்கை:



வங்கக்கடல் பகுதிகள்:


நாளை 20 மற்றும் 21ம் தேதி: குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.


அரபிக்கடல் பகுதிகள்:


நாளை 20 மற்றும் 21ம் தேதி: கேரள கடலோர பகுதி, மாலத்தீவு, லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X