பொது செய்தி

இந்தியா

99 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி சாதனை: மத்திய அரசு

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (15+ 4)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 99 கோடியாக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தெரிவித்துள்ளார்.இந்தியாவில் கடந்த ஜன.,16 ம் தேதி தடுப்பூசி போடும் பணி துவங்கியது. முதல்கட்டமாக டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. பிப்.,2 முதல் முன்கள
தடுப்பூசி, மத்திய அரசு, இந்தியா, மன்சுக் மாண்ட்வியா

புதுடில்லி: இந்தியாவில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 99 கோடியாக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த ஜன.,16 ம் தேதி தடுப்பூசி போடும் பணி துவங்கியது. முதல்கட்டமாக டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதார பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. பிப்.,2 முதல் முன்கள பணியாளர்களுக்கு (மத்திய மற்றும் மாநில போலீசார், ஊர் காவல் படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர், உள்ளாட்சி அமைப்பு பணியாளர்கள், சிறை மற்றும் வருவாய்த்துறை பணியாளர்கள்) தடுப்பூசி போடப்பட்டது.


latest tamil news



பின்னர் மார்ச் 1ம் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், ஏப்.,1 ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்கக்கும், மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தடுப்பூசி போடுவதற்காக பல சிறப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டன.

இந்நிலையில், சுகதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: 99 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இந்தியா முன்னேறி செல்கிறது. 100 கோடி தடுப்பூசி என்ற மகத்தான சாதனையை நோக்கி தீவிரமாக பணியாற்றி வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (15+ 4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
19-அக்-202120:40:03 IST Report Abuse
Ramesh Sargam இதுபோன்ற ஆளும் கட்சியின் சாதனைகளை பற்றி ஒருவார்த்தை எதிர் கட்சிகள் பேசவே பேசாது. அல்லது இதற்கு சாட்சி இருக்கா என்று கேள்வி கேட்கும். 'நாயின் வாலை நிமிர்த்த முடியுமா'???
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
19-அக்-202117:09:26 IST Report Abuse
J.Isaac இன்னும் அம்பானி தடுப்பூசி வரவில்லை
Rate this:
Soumya - Trichy,இந்தியா
19-அக்-202121:06:35 IST Report Abuse
Soumyaஓசில ஊசி போட்ட ஒல்லேலூயா நீ பேசலாமா ஹிஹிஹி...
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
19-அக்-202116:48:58 IST Report Abuse
J.Isaac பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைத்து சாதனை புரியுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X