எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார் பாபுல் சுப்ரியோ

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: பா.ஜ.,வில் இருந்து விலகி திரிணமுல்லில் இணைந்த பாபுல் சுப்ரியோ தனது எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார்.மே.வங்கத்தில் உள்ள அசன்சோல் தொகுதியில் இருந்து எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டு மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற பாபுல் சுப்ரியோ, கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் கடந்த செப்.,18
BJP, Babul Supriyo, Resign, Asansol, MP, TMC, பாபுல் சுப்ரியோ

புதுடில்லி: பா.ஜ.,வில் இருந்து விலகி திரிணமுல்லில் இணைந்த பாபுல் சுப்ரியோ தனது எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார்.

மே.வங்கத்தில் உள்ள அசன்சோல் தொகுதியில் இருந்து எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டு மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற பாபுல் சுப்ரியோ, கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த அமைச்சரவை மாற்றத்தின் போது பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அவர் கடந்த செப்.,18 ம் தேதி பா.ஜ.,வில் இருந்து விலகி திரிணமுல் காங்கிரசில் இணைந்தார். இதனால், அவர் எம்.பி., பதவியில் இருந்து விலகும் சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில், இன்று டில்லியில் லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து எம்.பி., பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை வழங்கினார்.


latest tamil news



பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: என் மீது நம்பிக்கை வைத்ததற்காக பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் பா.ஜ., தலைவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். கட்சியில் அங்கமாக இல்லாத போது, அக்கட்சி எனக்கு அளித்த எம்.பி., பதவியில் தொடர்வது நியாயம் இல்லை. கடந்த சில மாதங்கள் முன்பு வரை சுவேந்து அதிகாரி, திரிணமுல் காங்கிரசின் ஒரு அங்கமாக இருந்தவர். அரசியலுக்கு வெளியே அவர் எனது நண்பர். அரசியல் ரீதியாக அவர் என்னை கடுமையாக விமர்சனம் செய்திக்கலாம். ஆனால், அவர், திரிணமுல் காங்கிரசில் அங்கம் வகிக்காத போது, கட்சி வழங்கிய எம்.பி, பதவியில் இருந்து விலக அவரது தந்தை மற்றும் சகோதரருக்கு அறிவுரை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
visu - Pondicherry,இந்தியா
20-அக்-202106:09:27 IST Report Abuse
visu சுவேண்டு அதிகாரி திரிணாமுல் பதவியில் இருந்தால் ராஜினாமா செய்ய சொன்னால் நியாயம் அவரது சகோதரர் மற்றும் தந்தை பிஜேபி இல் இணைந்து விட்டார்களா என்ன இவர் ஏன் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்று புரிந்து கொள்ள முடிகிறது
Rate this:
Cancel
visu - Pondicherry,இந்தியா
20-அக்-202106:06:43 IST Report Abuse
visu முட்டாள்தனம்
Rate this:
Cancel
Mayavan Mayavan - Chennai,இந்தியா
19-அக்-202118:16:12 IST Report Abuse
Mayavan Mayavan பிஜேபி பிடித்த சனி ஒழிந்தது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X