ஆப்கன் விவகாரங்களில் பாக்., தலையிடக்கூடாது: முன்னாள் அதிபர் ஹமீது கர்சாய்

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
காபூல்: ‛‛ஆப்கனின் உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடக்கூடாது,'' என்று ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீது கர்சாய் தெரிவித்துள்ளார்.ஊடகம் ஒன்றுக்கு ஹமீது கர்சாய் அளித்தப் பேட்டியில் தெரிவித்ததாவது: தலிபான்கள் தேர்தல் நடத்தி தேசிய அவையைக் கூட்ட வேண்டும். உள்நாட்டில் சட்ட அந்தஸ்தைப் பெற வேண்டும். ஆப்ககானிஸ்தான் அரசியல் சாசனத்தை நடைமுறைப்படுத்த
ஆப்கானிஸ்தான், விவகாரங்கள், பாகிஸ்தான் தலையிடக்கூடாது, முன்னாள் ஆப்கன் அதிபர், ஹமீது கர்சாய்

காபூல்: ‛‛ஆப்கனின் உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடக்கூடாது,'' என்று ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் ஹமீது கர்சாய் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு ஹமீது கர்சாய் அளித்தப் பேட்டியில் தெரிவித்ததாவது: தலிபான்கள் தேர்தல் நடத்தி தேசிய அவையைக் கூட்ட வேண்டும். உள்நாட்டில் சட்ட அந்தஸ்தைப் பெற வேண்டும். ஆப்ககானிஸ்தான் அரசியல் சாசனத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். உள்நாட்டில் மக்களின் அங்கீகாரத்தைப் பெற்றால் தான் அவர்களால் சர்வதேச அங்கீகாரம் பெற இயலும். தேசிய அடையாளமும், சர்வதேச அங்கீகாரமும் பெற்றால் தான் தலிபான்கள் ஆட்சி சிறக்கும்.


latest tamil news


அதேபோல் ஆப்கனின் உள்நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிடாது இருக்க வேண்டும். சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் உடனான உறவை அமைத்துக் கொள்ள வேண்டும். பாகிஸ்தான் அண்மைக்காலமாகவே ஆப்கானிஸ்தானின் பிரதிநிதி போல் தன்னைக் காட்டிக் கொள்கிறது. பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுக்கோ அதன் மக்களுக்கோ பிரதிநிதி இல்லை. இதை பாகிஸ்தான் உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சர்வதேச அரசியல் ஆலோசகரான அகமது கான் அந்தார் தெரிவித்துள்ளதாவது: தலிபான்கள் அமைத்துள்ள ஆட்சியை எந்தவொரு நாடும் அங்கீகரிக்கவில்லை. இது ஆப்கன் மக்களுக்கு மிகவும் ஆபத்தானது. ஏற்கனவே ஆப்கன் மக்கள் வறுமையில் வாடுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-அக்-202123:33:40 IST Report Abuse
Radhakrishnan ஓடிப் போனவர் அஷ்ரப் கனி. இவர் அவருக்கும் முந்தைய அதிபர்.
Rate this:
Cancel
Arul Narayanan - Hyderabad,இந்தியா
19-அக்-202120:08:55 IST Report Abuse
Arul Narayanan இவர் ஓடிப் போனவர் இல்லை. ஓடிப் போன அதிபர் முகமது கனி.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
19-அக்-202119:55:14 IST Report Abuse
Ramesh Sargam அன்று ஆப்கன் மக்களை அம்போ என்று தவிக்கவிட்டு, பல கோடி பணத்தை அள்ளிக்கொண்டு வேறு நாட்டுக்கு ஓடிய இவன் இப்பொழுது எதுவும் பேச லாயக்கில்லாத ஒரு துரோகி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X