உ.பி., தேர்தலில் காங்கிரசில் 40% பெண் வேட்பாளர்கள்: பிரியங்கா

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
லக்னோ: ‛‛உத்தரபிரதேசத்தில் அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை பொதுத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் 40 சதவீதம் பெண் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்,'' என காங்., பொதுச்செயலர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.உத்தரபிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் கட்சியான பா.ஜ.,வை எதிர்த்து காங்கிரஸ், சமாஜ்வாதி என போட்டிபோட்டு வருவதால் அரசியல் களம்
UP, Priyanka, Female Candidates, Congress, Priyanka Gandhi, Announces, 40 Percent, Reservation, உத்தரபிரதேசம், உபி, பிரியங்கா, பிரியங்கா காந்தி, பெண்கள், ஒதுக்கீடு, வேட்பாளர்கள், சட்டசபை தேர்தல்

லக்னோ: ‛‛உத்தரபிரதேசத்தில் அடுத்தாண்டு நடக்கவுள்ள சட்டசபை பொதுத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் 40 சதவீதம் பெண் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்,'' என காங்., பொதுச்செயலர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் கட்சியான பா.ஜ.,வை எதிர்த்து காங்கிரஸ், சமாஜ்வாதி என போட்டிபோட்டு வருவதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெறும் 7 தொகுதிகளில் மட்டுமே வெற்றிப் பெற்ற நிலையில், இம்முறை காங்கிரஸ் கட்சியை பெருவாரியான இடங்களை கைப்பற்ற காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பிரியங்கா கூறியதாவது: வரும் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் 40 சதவீதம் இடங்களில் பெண்களுக்கு அளிக்க முடிவு செய்துள்ளோம்.


latest tamil news


மாற்றம் வேண்டும் என எதிர்பார்க்கும் பெண்கள் அனைவரும் போட்டியிட விண்ணப்பிக்கலாம். உ.பி.,யில் காங்கிரஸ் பொறுப்பாளராக நான் இருப்பதால், பெண்களுக்கு 40 சதவீத ஒதுக்கீடு என முடிவெடுத்துள்ளோம். மற்ற மாநிலங்களிலும் இந்த நடைமுறையை வரவேற்றால் அங்குள்ள காங்கிரஸ் இதனை பின்பற்றலாம். இந்த இட ஒதுக்கீட்டை தலைவர்களின் மனைவிகள் மற்றும் மகள்கள் பயன்படுத்தினால் அதில் என்ன தவறு இருக்கிறது?. எதிர் கட்சியினர் என்னை அரசியல் சுற்றுலா பயணி, டுவிட்டர் தலைவர் போன்ற பல விதங்களில் என்னை தாக்குகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna -  ( Posted via: Dinamalar Android App )
20-அக்-202101:02:58 IST Report Abuse
Krishna ONNIKKUM UDHAVAADHA SAGA KIDAKKUM KATCHIYIL AANGAL NINDRAAL ENNA PENGAL NINNA ENNA.ELLAM THOLVIDHAAN.IDHUKKU EEN INDHA MINNAL PAPPY SCENE PODUDHU.
Rate this:
Cancel
Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ
20-அக்-202100:23:18 IST Report Abuse
Mahesh அப்படியா? நிலைமை அவ்வளவு மோசமா? தோற்றபிறகு இப்படி செய்ததால்தான் தோற்றோம் என்று பெண் வேட்பாளர்களை பலிகடா ஆக்கிவிடலாம்
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
19-அக்-202123:03:20 IST Report Abuse
Aarkay சொர்ணாக்கா
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
20-அக்-202122:58:59 IST Report Abuse
Aarkayகூவாகம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X