அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொய் வழக்குகளுக்கு எல்லாம் அ.தி.மு.க., அஞ்சாது: பழனிசாமி பேச்சு

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
ஆத்தூர்: ‛‛அ.தி.மு.க., நிர்வாகிகள் மீது போடப்படும் பொய் வழக்குகளைக் கண்டு அ.தி.மு.க., எப்போதும் அஞ்சாது,'' என, தலைவாசலில், தமிழக எதிர்கட்சி தலைவர் பழனிசாமி பேசினார்.அ.தி.மு.க., 50வது ஆண்டு பொன் விழாவையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அக்கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சென்னையில் இருந்து சேலம் வந்தார். சேலம்
பொய் வழக்குகள், அதிமுக, அஞ்சாது, எதிர்கட்சிதலைவர், பழனிசாமி, உறுதி,

ஆத்தூர்: ‛‛அ.தி.மு.க., நிர்வாகிகள் மீது போடப்படும் பொய் வழக்குகளைக் கண்டு அ.தி.மு.க., எப்போதும் அஞ்சாது,'' என, தலைவாசலில், தமிழக எதிர்கட்சி தலைவர் பழனிசாமி பேசினார்.

அ.தி.மு.க., 50வது ஆண்டு பொன் விழாவையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அக்கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சென்னையில் இருந்து சேலம் வந்தார். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், அ.தி.மு.க., 50வது ஆண்டு பொன் விழாவையொட்டி கொடி ஏற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சியினை அக்கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இதில், பங்கேற்ற பழனிசாமி பேசியதாவது: கொரோனா காலகட்டம் என்பதால் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.,க்களால் ஓட்டு போட்ட மக்களுக்கு நன்றி தெரிவிக்க முடியவில்லை.


latest tamil news


சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதியில் 10 தொகுதியில் வெற்றியினை பெற்றுத்தந்து, 90 சதவீத வெற்றி அளித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது தி.மு.க., அரசு பொய் வழக்கு போடுகிறது. இந்த பொய் வழக்குகளுக்கு எல்லாம் அ.தி.மு.க., அஞ்சாது. எம்.ஜி.ஆர்., இருந்தபோது பல்வேறு சோதனைகளுக்கு உள்ளானார்கள். அதையெல்லாம் உடைத்தெறிந்து சாதனை படைத்த தலைவர் உருவாக்கிய கட்சி அ.தி.மு.க., மேலும் அ.தி.மு.க., தொடங்கி 50 ஆண்டு காலத்தில் 30 ஆண்டு ஆட்சி செய்த கட்சி அ.தி.மு.க.,


latest tamil news


தற்போது நடைபெற்று முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றனவா? அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தியது. ஆனால், தற்போது நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களையும் தோல்வியுற்றவர்களாக அறிவித்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களுக்கு தற்போது முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sudharman - chennai,இந்தியா
19-அக்-202123:13:22 IST Report Abuse
sudharman ஐயா கரெக்டா தானே சொல்லறாரு. பொய் வழக்குக்கு பயப்பட மாட்டோம். உண்மையான வழக்குன்னா கை கால் மத்த எல்லாமே கட கடன்னு ஆடும்னு சொல்லறாரு.
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
19-அக்-202123:02:50 IST Report Abuse
Aarkay உங்கள் அமைச்சரவையில் யாரும் Mr. Clean இல்லை. எனவே, நீங்கள் எவ்வளவு கூவினாலும் உங்களால் பயனடைந்தவர்கள் மட்டுமே உங்கள் கூவலுக்கு செவிமடிப்பார்கள். மக்கள் யாரும் ஊழலை ஆதரிக்க மாட்டார்கள். நாற்காலியை காத்துக் கொள்வதில் தான் உங்கள் கவனமிருந்ததேயன்றி, ஊழலற்ற சிறப்பான நிர்வாகம் தருவதில் இல்லை. மக்கள் உங்களை கழற்றி விட்டுவிட்டார்கள். மக்களை பிச்சைக்காரர்களாக்கி இலவசம் கொடுத்து ஏமாற்றுவதை விடுத்து மாநிலத்தின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.
Rate this:
Cancel
rajan -  ( Posted via: Dinamalar Android App )
19-அக்-202120:53:55 IST Report Abuse
 rajan உங்கள் ஆட்சியில் எத்தனை பொய் வழக்குகள் போட்டீர்கள். சாராயக் கடைகளுக்கு எதிராக போராடியவர்களை கைது செய்து பொய் வழக்கு போட்டீர்கள். எட்டு வழி சாலைக்கு எதிராக போராடிய விவசாயிகளின் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்தீர்கள். இனிமேல் நீங்கள் சாதனை என்று எதையும் செய்ய முடியாது உங்களுக்கு இனி சோதனைதான். பொய் வழக்குகளுக்கு அஞ்சா விட்டால் எதிர்த்து நில்லுங்கள் யார் வேண்டாம் என்பது?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X