அமெரிக்காவின் பொருளாதார தடையை நீக்க வேண்டும்: ஈரான் வலியுறுத்தல்

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
தெஹ்ரான்: 'ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும்' என, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார்.ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. இது தொடர்பான விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேச்சு நடத்த, கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அப்போதைய அதிபர் ஹசன் ரவ்ஹானி முயன்று வந்தார். இதற்காக முயற்சியை, ஈரானின் புதிய

தெஹ்ரான்: 'ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும்' என, ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி தெரிவித்துள்ளார்.



latest tamil news



ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது. இது தொடர்பான விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேச்சு நடத்த, கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து அப்போதைய அதிபர் ஹசன் ரவ்ஹானி முயன்று வந்தார். இதற்காக முயற்சியை, ஈரானின் புதிய அதிபராக பதவியேற்ற இப்ராஹிம் ரைசியும் தொடர்ந்தார்.


latest tamil news



இந்நிலையில், 'ஈரான் அனைத்து விதிமுறைகளுக்கும் ஒப்புக்கொண்டால் அணு ஆயுத ஒப்பந்தத்தில் இணைய அமெரிக்கா தயாராக உள்ளது' என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

இதையடுத்து ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி கூறுகையில், 'அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பான அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் நாங்கள் எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை நீக்கப்பட வேண்டும். இதில் நாங்கள் தீர்க்கமாக இருக்கிறோம்' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-அக்-202119:58:44 IST Report Abuse
சம்பத் குமார் 1). Iran மற்றும் America இடையே சுமாராக 11, 700 Km இடைவெளி உள்ளது. இடையே பல நாடுகள்.2). அமெரிக்கா உலகின் வல்லரசு. பொருளாதாரம் மற்றும் இராணுவ பலம் இரண்டிலும்.3). சீனாவே தற்போதைய அமெரிக்கா அளவிற்கு இராணுவ பலம் பெற இன்னும் நாப்பது ஐம்பது வருடங்கள் ஆகும்..4). அமெரிக்கா உடன் ஒன்று நட்புறவாக இருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அவர்களுக்கு எதிரியாக மாறிவிட கூடாது.5)). நீதிமன்ற அமினா கால் வைத்த வீடும் அமெரிக்கா கால் வைத்த நாடும் விளங்காது. நன்றி ஐயா. ஹரி ஓம்.
Rate this:
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
19-அக்-202118:59:24 IST Report Abuse
Vittalanand கச்சா எண்ணெய் பாண்டா மாற்றுக்கு அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டாலே தடை நீங்கும். ஷியா சன்னி எல்லாம் சும்மா.
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
19-அக்-202118:02:09 IST Report Abuse
Samathuvan யானைக்கும் அடி சறுக்கும். கொஞ்சம் பொறுப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X