அமெரிக்காவில் இந்திய உணவகம் மீது தாக்குதல்: எப்.பி.ஐ விசாரணை

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
நியூயார்க்: அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ நகரில் இந்திய உணவகம் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதல் தொடர்பாக அந்நாட்டின் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ விசாரணை நடத்த உள்ளது.அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள நியூமெக்ஸிகோ மாகாணத்தின் சான்டா பெ நகரில் உள்ள உணவகம் ஒன்றை, பல்ஜித் சிங் என்பவர் வாங்கி நடத்தி வந்தார். அதன் பின்னர், பல்ஜோத் சிங் நடத்தினார். கடந்த 2020ம் ஆண்டு ஜூன்
FBI, Investigate, Attack, Indian Restaurant ,  New Mexico, இந்திய உணவகம், அமெரிக்கா, எப்பிஐ, விசாரணை, இனவெறி,

நியூயார்க்: அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ நகரில் இந்திய உணவகம் மீது மர்ம நபர்கள் நடத்திய தாக்குதல் தொடர்பாக அந்நாட்டின் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ விசாரணை நடத்த உள்ளது.

அமெரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள நியூமெக்ஸிகோ மாகாணத்தின் சான்டா பெ நகரில் உள்ள உணவகம் ஒன்றை, பல்ஜித் சிங் என்பவர் வாங்கி நடத்தி வந்தார். அதன் பின்னர், பல்ஜோத் சிங் நடத்தினார். கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம், அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதுடன், உணவக பெயரை பெயின்ட் மூலம் அழித்து டிரம்ப் 2020 என எழுதினர். மேலும், உரிமையாளர்களுக்கு எதிராக இனவெறியை தூண்டும் வகையிலும் கருத்துகளை எழுதியுள்ளனர். இதனால் 1 லட்சம் டாலர் அளவுக்கு சேதம் ஏற்பட்டது. இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்தது.


latest tamil news



இதனையடுத்து சான்டா பெ நகர போலீசார், இந்தியர்களுக்கு எதிரான இனவெறியை தூண்டும் குற்றமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், சம்பவம் நடந்து 16 மாதங்கள் ஆகியும் இன்னும் குற்றவாளிகளை கைது செய்யவில்லை. குற்றப்பத்திரிகை தாக்குதல் செய்யவில்லை.

இந்நிலையில், இந்த வழக்கை எப்.பி.ஐ விசாரணை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், குற்றவாளிகளை நீதியின் முன்னாள் நிறுதத் உறுதிபூண்டுள்ளோம். போலீசார் நடத்திய விசாரணை அடிப்படையில், இந்த சம்பவத்தில் ஒருவர் மட்டும் ஈடுபடவில்லை என்பது உறுதியாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
23-அக்-202120:07:03 IST Report Abuse
K.n. Dhasarathan படித்தவர்கள் உள்ள நாடு ஆனாலும் இப்படி ஒரு கேவலமான முகம் உண்டு, இந, மத, நிற துவேசம் உள்ள நாடு. மக்கள் அல்ல மாக்கள் நிறைந்த நாடு.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
19-அக்-202119:40:24 IST Report Abuse
Ramesh Sargam யாரோ ஒரு இனவெறி பிடித்த கும்பல்தான் இதை செய்திருக்க வேண்டும். அவர்கள் வெகு விரைவில் பிடிபட்டு கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.
Rate this:
Cancel
19-அக்-202118:54:02 IST Report Abuse
ஆரூர் ரங் அட நம்ம ஊரு உபீஸ்😎🤓 அங்குமா படையெடுத்துள்ளனர்? முளையிலேயே கிள்ளி எறியுங்கள். நாங்கள் படும்பாடு😓😩 போதும்
Rate this:
selva - Chennai,இந்தியா
19-அக்-202122:59:36 IST Report Abuse
selvaகடைசியா ஸ்ரீ...ம் சொல்லி இருப்பானுங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X