அமெரிக்காவின் முக்கிய பொறுப்புகளில் மேலும் 3 இந்திய வம்சாவளியினர் நியமனம்

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகையில் தற்போது 19 இளம் நிபுணர்கள், பல்வேறு துறைகளுக்கு உதவும் வகையில் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜாய் பாசு, சன்னிபட்டேல், ஆகாஷ் ஷா ஆகிய மூவர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.ஜாய் பாசு புதிய வர்த்தகங்களுக்கு ஆலோசகராக இருந்தார். உணவு மற்றும் வேளாண்மைக்கான சர்வதேச துறையின்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகையில் தற்போது 19 இளம் நிபுணர்கள், பல்வேறு துறைகளுக்கு உதவும் வகையில் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜாய் பாசு, சன்னிபட்டேல், ஆகாஷ் ஷா ஆகிய மூவர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.latest tamil newsஜாய் பாசு புதிய வர்த்தகங்களுக்கு ஆலோசகராக இருந்தார். உணவு மற்றும் வேளாண்மைக்கான சர்வதேச துறையின் தலைவராகவும் உலக பொருளாதார மன்றத்தில் வேளாண்மை திட்ட மேலாளராகவும் பணியாற்றியவர். மனநல மருத்துவரான சன்னிபட்டேல், குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு சேவை செய்யும் சுகாதார அமைப்புகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வந்தார். இந்தியா, தாய்லாந்து, டொமினிக்கன் குடியரசு நாடுகளில் சேவை பணிகளை செய்துள்ளார். பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகளையும் வழங்கி உள்ளார்.

மருத்துவம் படித்துள்ள ஆகாஷ் ஷா, உடல் நலம் மற்றும் மனித சேவைகள் துறையில் பணியாற்றி வந்தார். கோவிட் நோய்க்கு சிகிச்சை அளிப்பதிலும் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.


latest tamil news


வெள்ளை மாளிகையில் ஏற்கனவே இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக உள்ளார். இது தவிர இந்திய வம்சாவளியை சேர்ந்த சில அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர். தற்போது மேலும் 3 இந்தியர்கள் இவர்களுடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
19-அக்-202120:11:12 IST Report Abuse
Rajagopal இங்கிருக்கும் இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவுக்கு ஆதரவாக எதுவும் செய்யவோ, சொல்லவோ மாட்டார்கள். பலர் நம் ஊரை ஆண்ட ஆங்கிலேயர்களை போல நடந்துகொள்வார்கள். தங்களை வெள்ளைக்காரர்கள் தங்களுக்கு நிகராக பெரிய பதவியில் அமர்த்தியிருக்கிறார்கள் என்று புளகாங்கிதம் அடைபவர்கள். அவர்களிடம் இந்தியாவுக்கு சாதகமாக ஒன்றும் எதிர்பார்க்காதீர்கள். இவர்கள் இந்தியாவை விட்டு போனதே நல்லது. வெளியே பழுப்பு, உள்ளே வெள்ளை. அதுதான் இவர்களின் உண்மை வடிவம்.
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
19-அக்-202120:07:36 IST Report Abuse
J. G. Muthuraj இருக்கட்டுமே.....அமெரிக்காவில் யார் பணிபுரிந்தாலும் அது உன்னதமான பெருமைக்குரிய திறமைசாலி இந்தியர்.....அப்ப, இந்தியாவிலுள்ள 130 கோடி மக்கள்?......இந்தியாவிலுள்ள வம்சங்கள் ஒருவரையொருவர் ஜாதி, மத, அரசியல் கட்சியின் பெயரால் வெறுக்கவும், கொல்லவும் துணிந்து விட்டன.....ஏதோ ஒரு நாட்டில் பிழைக்கப்போன இந்திய வம்சாவளியைப் பார்த்து பாசமழை எப்படி பொழிவது?.....
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
19-அக்-202119:37:14 IST Report Abuse
Ramesh Sargam இது ஒருவகையில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தாலும், அவர்கள் இங்கு இந்தியாவிலேயே அப்துல் கலாம் போல் இந்தியாவிலேயே சிறந்த பணிபுரிந்தால் அது மேலும் பெருமை இந்தியாவுக்கு.
Rate this:
vadivelu - thenkaasi,யூ.எஸ்.ஏ
20-அக்-202107:35:04 IST Report Abuse
vadiveluஇந்தியாவுக்கு பெருமையே அவர்கள் வெளியே போன பின்தான் கிடைத்து இருக்கு....
Rate this:
Barakat Ali - Medan,இந்தோனேசியா
20-அக்-202108:18:33 IST Report Abuse
Barakat Aliதிரைகடலோடியும் திரவியம் தேடு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X