அமெரிக்காவின் முக்கிய பொறுப்புகளில் மேலும் 3 இந்திய வம்சாவளியினர் நியமனம்| Dinamalar

அமெரிக்காவின் முக்கிய பொறுப்புகளில் மேலும் 3 இந்திய வம்சாவளியினர் நியமனம்

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (10)
Share
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகையில் தற்போது 19 இளம் நிபுணர்கள், பல்வேறு துறைகளுக்கு உதவும் வகையில் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜாய் பாசு, சன்னிபட்டேல், ஆகாஷ் ஷா ஆகிய மூவர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.ஜாய் பாசு புதிய வர்த்தகங்களுக்கு ஆலோசகராக இருந்தார். உணவு மற்றும் வேளாண்மைக்கான சர்வதேச துறையின்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் அலுவலகமான வெள்ளை மாளிகையில் தற்போது 19 இளம் நிபுணர்கள், பல்வேறு துறைகளுக்கு உதவும் வகையில் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ஜாய் பாசு, சன்னிபட்டேல், ஆகாஷ் ஷா ஆகிய மூவர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.



latest tamil news



ஜாய் பாசு புதிய வர்த்தகங்களுக்கு ஆலோசகராக இருந்தார். உணவு மற்றும் வேளாண்மைக்கான சர்வதேச துறையின் தலைவராகவும் உலக பொருளாதார மன்றத்தில் வேளாண்மை திட்ட மேலாளராகவும் பணியாற்றியவர். மனநல மருத்துவரான சன்னிபட்டேல், குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு சேவை செய்யும் சுகாதார அமைப்புகளை உருவாக்குவதில் ஆர்வம் காட்டி வந்தார். இந்தியா, தாய்லாந்து, டொமினிக்கன் குடியரசு நாடுகளில் சேவை பணிகளை செய்துள்ளார். பல்வேறு ஆராய்ச்சி கட்டுரைகளையும் வழங்கி உள்ளார்.

மருத்துவம் படித்துள்ள ஆகாஷ் ஷா, உடல் நலம் மற்றும் மனித சேவைகள் துறையில் பணியாற்றி வந்தார். கோவிட் நோய்க்கு சிகிச்சை அளிப்பதிலும் தீவிரமாக செயல்பட்டு வந்தார்.


latest tamil news


வெள்ளை மாளிகையில் ஏற்கனவே இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக உள்ளார். இது தவிர இந்திய வம்சாவளியை சேர்ந்த சில அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு உள்ளனர். தற்போது மேலும் 3 இந்தியர்கள் இவர்களுடன் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X