பொது செய்தி

இந்தியா

ஆப்கானிஸ்தானுக்கு 50 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை: இந்தியா வழங்குகிறது

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
புதுடில்லி: ஆப்கானிஸ்தானில் உணவு பொருட்களின் நெருக்கடியை கருத்தில் கொண்டு, 50 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்தியா நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளது.‛‛தலிபானுடனான இந்தியாவின் உறவை பொருட்படுத்தாமல் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தடையற்ற மற்றும் மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்யப்படும். ஆப்கானிஸ்தான் மக்களுடனான பாரம்பரிய நட்பு உறவு
ஆப்கானிஸ்தான், 50000 மெட்ரிக்டன், கோதுமை, மனிதாபிமானம், இந்தியா, வழங்கமுடிவு,

புதுடில்லி: ஆப்கானிஸ்தானில் உணவு பொருட்களின் நெருக்கடியை கருத்தில் கொண்டு, 50 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்தியா நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளது.

‛‛தலிபானுடனான இந்தியாவின் உறவை பொருட்படுத்தாமல் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு தடையற்ற மற்றும் மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் செய்யப்படும். ஆப்கானிஸ்தான் மக்களுடனான பாரம்பரிய நட்பு உறவு மற்றும் அணுகுமுறையை தொடர்ந்து சுமூகமாக வழிநடத்தும்,'' என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.


latest tamil news


ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அந்த நாட்டுக்கு சர்வதேச நாடுகள் உதவி செய்ய மறுத்து வருகின்றன. மேலும் கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட வறட்சிகளினாலும், உள்நாட்டுப் போரினாலும் உணவு தானியங்களின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானில் நாளுக்கு நாள் உணவு பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு பன்னாட்டு அமைப்புகளும், வளர்ந்த நாடுகளும் அளித்து வந்த நிதி உதவியை நிறுத்தி விட்டதால் கடுமையான பொருளாதார நெருக்கடியிலும் ஆப்கானிஸ்தான் சிக்கி தவித்து வருகிறது.

கடந்த ஆண்டு மட்டும் 75 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையை நன்கொடையாக ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அனுப்பியது. கோதுமையை பாகிஸ்தானின் அதாரி-வாகா எல்லை வழியாக அனுப்ப பாகிஸ்தான் அனுமதிக்க மறுப்பதால் கப்பலில் சாபஹார் துறை முகம் வழியாக ஈரானுக்கு அனுப்பப்பட்டு பின் ஆப்கானிஸ்தானுக்கு சாலை மார்க்கமாக அனுப்பப்பட்டது.


latest tamil news


‛‛ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமானம் அடிப்படையில் உதவுபவர்களுக்கு தடையற்ற மற்றும் நேரடி அணுகுமுறையை இந்தியா விரும்புகிறது. இந்த உதவிகள் அனைத்தும் ஆப்கானிஸ்தான் சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலும் பாகுபாடின்றி போய் சேர வேண்டும்,'' என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள உணவு பொருட்களின் நெருக்கடியை கருத்தில் கொண்டு, 50 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை மற்றும் மருத்துவ உபகரணங்களை நன்கொடையாக இந்தியா அனுப்ப திட்டமிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
20-அக்-202107:39:31 IST Report Abuse
 N.Purushothaman இட்டிலி வசனம் பேசுற கம்மிங்க இதுக்கு என்ன சொல்லுவாங்க ? ஆகா ஓகோன்னு சொல்லுவாங்களா ? இல்லை எதுவுமே தெரியாமல் அப்படியே கடந்து போயிடுவாங்களா ?
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
20-அக்-202100:51:52 IST Report Abuse
Natarajan Ramanathan முற்றிலும் தேவையில்லாத உதவி.... இந்த மாதிரி செய்துதான் இந்தியா நாசமாகிறது
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
20-அக்-202100:04:46 IST Report Abuse
Mohan இங்க ரேசன் கடைல கோதுமைன்னு பேர்ல குப்பைய போடுறாங்க ஜி . இங்கேயும் ஏழை மக்கள் இருக்காங்க. பாத்து செய்யுங்க.
Rate this:
20-அக்-202106:56:20 IST Report Abuse
ராஜாரேஷனில் வாங்கி வெளியே விற்கும் ஆட்களுக்கு குப்பையை போட்டால் பரவாயில்லை....
Rate this:
கௌடில்யன் - Chennai ,இந்தியா
20-அக்-202109:03:56 IST Report Abuse
கௌடில்யன்ரேஷன்ல இலவசமா சாமான் வாங்கறது உங்களுக்கு மனச உறுத்தல .....
Rate this:
தமிழன் - கோவை,இந்தியா
20-அக்-202109:18:51 IST Report Abuse
தமிழன்200% கு மேல வரி வாங்கும்போது அரசுக்கு உறுத்தலயா?...
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
20-அக்-202123:01:02 IST Report Abuse
Aarkayஹவாலாக்கள் வரி கட்டுகிறார்களா என்ன?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X