மதத்தை பயன்படுத்தி வன்முறையை தூண்டுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை: வங்கதேச பிரதமர் உத்தரவு

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
டாக்கா: மதத்தைப் பயன்படுத்தி வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, உள்துறை அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், உண்மை அறியாமல் சமூக ஊடகங்களில் இருந்து எதையும் நம்ப வேண்டாம் என பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.வங்கதேசத்தில் ஹிந்துகள் மீது அடுத்தடுத்து நடத்தப்படும் தாக்குதல்கள் அதிர்வலைகளை
Bangladesh PM, Take Action, Hindus Targeted, Minister, Report, மதம், வன்முறை, தூண்டுபவர்கள், நடவடிக்கை, வங்கதேச பிரதமர், உத்தரவு

டாக்கா: மதத்தைப் பயன்படுத்தி வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, உள்துறை அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், உண்மை அறியாமல் சமூக ஊடகங்களில் இருந்து எதையும் நம்ப வேண்டாம் என பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வங்கதேசத்தில் ஹிந்துகள் மீது அடுத்தடுத்து நடத்தப்படும் தாக்குதல்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் துர்கா பூஜை அக்.,11ம் தேதி பல்வேறு இடங்களில் துவங்கியது. கடந்த வாரம் புதன்கிழமை தலைநகர் டாக்காவில் இருந்து 100 கி.மீ., தொலைவில் உள்ள குமிலா என்ற இடத்தில் துர்கா பூஜை நடைபெற்றது. அப்போது முஸ்லிம்களின் புனித நூலான குரான் அவமதிக்கப்பட்டதாக வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாக பரவியது. இதையடுத்து துர்கா பூஜையில் அடையாளம் தெரியாத முஸ்லிம்கள் சிலர் புகுந்து சாமி சிலைகளை சேதப்படுத்தினர். இதைத்தொடர்ந்து பல்வேறு இடங்களில் வன்முறை நிகழ்ந்தது. பல இடங்களில் ஹிந்து கோவில்கள் சேதப்படுத்தப்பட்டன.


latest tamil news


அதேபோல் தற்போது ராங்பூர் மாவட்டம் மஜிபாரா என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் முஸ்லிம்கள் குறித்து பேஸ்புக்கில் சர்ச்சை கருத்தை பதிவிட்டதாக தகவல் வெளியாக, அந்த பகுதியில் நுழைந்த ஒரு கும்பல், 20 வீடுகளுக்கு தீ வைத்ததோடு, 66 வீடுகளை சூறையாடியது. ஹிந்துக்கள் மற்றும் ஹிந்துக் கோவில்கள் மீதான இந்த தாக்குதல் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற வங்கதேச பிரதமர் ஹசீனா, மதத்தைப் பயன்படுத்தி வன்முறையைத் தூண்டுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சர் அசாதுசமான் கானுக்கு உத்தரவிட்டார். மேலும், உண்மை அறியாமல் சமூக ஊடகங்களில் இருந்து வரும் எதையும் நம்ப வேண்டாம் என பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
20-அக்-202122:45:49 IST Report Abuse
Aarkay அண்டை நாட்டை திருப்திப்படுத்த வெறும் வாய்ப்பந்தல் போடாமல், செயலிலும் காட்டினாள் நன்றாய் இருக்கும்.
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
20-அக்-202106:48:18 IST Report Abuse
 N.Purushothaman மதசார்பற்ற நாடாக இருந்ததை மதச்சார்பு நாடாக மாற்றி இன்னைக்கு நாட்டில் அமைதி இல்லாமல் செய்தது யார் ?
Rate this:
Cancel
Sivagiri - chennai,இந்தியா
19-அக்-202121:01:20 IST Report Abuse
Sivagiri சரி , இவங்க எல்லாம் முழுவதும் கருப்பு படுதா போட வேண்டியதில்லையா ? சாதாரண ஏழை - பாமர ஜனங்களுக்கு மட்டும்தான் கட்டுப்பாடுகள் , ரூல்ஸ் ,- - பணம் , பட்டம் , பதவி , இருந்தால் அதெல்லாம் ஒன்னும் இல்லை - நோ ரூல்ஸ் . ? . .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X