பிரதமரை 'ஜேம்ஸ் பாண்ட் 007' ஏஜண்டாக மாற்றி திரிணாமூல் காங்., கிண்டல்

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
கோல்கட்டா: பாரத பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்று ஏழு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து பாஜ.,வில் உள்ள முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் பலர் இதனை கொண்டாடி வருகின்றனர். அதே சமயத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 7 ஆண்டுகால ஆட்சியை விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் பிரதமரை 'ஜேம்ஸ் பாண்ட் 007' ஏஜண்டாக மாற்றி திரிணாமூல் காங்., கிண்டல்

கோல்கட்டா: பாரத பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்று ஏழு ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து பாஜ.,வில் உள்ள முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள் பலர் இதனை கொண்டாடி வருகின்றனர். அதே சமயத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 7 ஆண்டுகால ஆட்சியை விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் பிரதமரை 'ஜேம்ஸ் பாண்ட் 007' ஏஜண்டாக மாற்றி திரிணாமூல் காங்., கிண்டல் அடித்துள்ளது.latest tamil newsநாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகள் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள கணக்குகளில் மீம்களை இடுவது வாடிக்கையாகிவிட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் டெரிக் 'ஓ'பிரைன் தனது பேஸ்புக் பக்கத்தில் பிரதமர் மோடியின் ஏழு ஆண்டு சாதனை விமர்சிக்கும் வகையில் கிண்டலாக மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
பிரபல பிரிட்டிஷ் உளவாளியான ஜேம்ஸ் பாண்ட்டுக்கு 'நாட் நாட் செவென்' என்கிற அடையாளம் உண்டு. பிரிட்டனில் '00' என்கிற அடையாளம் பெறும் உளவாளிக்கு குற்றவாளிகளை சுட்டுக்கொல்ல அனுமதி உண்டு. குறிப்பிட்ட சில உயர் அதிகாரிகளுக்கு மட்டுமே இந்த உரிமை வழங்கப்படும். ஜேம்ஸ்பாண்ட் படங்களில் பிரிட்டனில் இந்த '00' உரிமை பெற்ற ஏழாவது அதிகாரியாக ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதனால் ஜேம்ஸ் பாண்ட் உடன் '007' இணைந்துகொண்டது.


latest tamil newsஇதன்காரணமாகவே ஜேம்ஸ்பாண்ட் பட டைட்டில் களில் '007' என்கிற எண் உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வெளியிட்ட மீமில் பிரபல ஜேம்ஸ் பாண்ட் போஸ்டரில் ஜேம்ஸ்பாண்டுக்கு பதிலாக பிரதமர் மோடி நடந்துவருவது போலவும் அவருக்கு கீழ் '007' என்கிற டைட்டிலும் உள்ளது.
இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் புதிய விளக்கத்தை அளித்துள்ளனர். கடந்த ஏழு ஆண்டுகளில் நாட்டின் வளர்ச்சி பூஜ்ஜியம், பொருளாதார வளர்ச்சி பூஜ்யம் என்று என்பதை சுட்டிக்காட்டும் விதமாக '007' அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இந்த மீம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பாஜ., தரப்பில் இருந்து இன்னும் எந்த பதிலும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramona - london,யுனைடெட் கிங்டம்
20-அக்-202110:33:30 IST Report Abuse
Ramona சரியாக சொன்னீர்கள், உண்மையான உலகமே போற்றி வரும் ஜேம்ஸ் பாண்ட் 007 திரு நரேந்திர மோடி தான், எதிர் அணி கூடாரத்தில் தினமும் மோடியை பற்றியே அர்ச்சனை அபிஷேகம் அலங்காரம் செய்து அழகு பார்க்கும், தி மு காங்கிரஸ், சோனியா ராகுல்,பிரியங்கா,வாதரா, காங்கிரஸ் கட்சியின் மோடி மீதான அன்பை இந்த ஜேம்ஸ் பாண்ட் வரியை காட்டுகிறது. பாவம் பறப்பவையெல்லாம் பறந்து ஆகிவிடாது, ஊர்குருவிகள் ஊர்குருவிகள் தான். இதில் என்ன சந்தேகம்..எங்கள் பிரதம மந்திரி அசல் சிங்கம் தான் சந்தேகம் வேண்டாம்..
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
19-அக்-202122:52:21 IST Report Abuse
Aarkay நாங்கள் திதியை எப்போதோ சொர்ணாக்கா ரேஞ்சுக்கு கொண்டு சென்றாகிவிட்டது. ரொஹிங்கியாக்களின் தலைவி சொர்ணாக்கா
Rate this:
Cancel
19-அக்-202122:04:51 IST Report Abuse
அப்புசாமி கூலிங் கிளாஸ் குறையுதே....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X