ராகுல் போதை மருந்துக்கு அடிமை: மோடி படிப்பறில்லாதவர்: கர்நாடக தலைவர்கள் குற்றச்சாட்டு

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
பெங்களூரு: ராகுல் போதை மருந்துக்கு அடிமையானவர் எனவும் மோடி படிப்பறில்லாதவர் எனவும் கர்நாடக அரசியல் கட்சி தலைவர்கள் பரஸ்பரம் குற்றசாட்டு தெரிவித்து வருகின்றனர் இது குறித்து கூறப்படுவதாவது: கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சி பள்ளிகளை கட்டியது, ஆனால் மோடி ஒரு போதும்

பெங்களூரு: ராகுல் போதை மருந்துக்கு அடிமையானவர் எனவும் மோடி படிப்பறில்லாதவர் எனவும் கர்நாடக அரசியல் கட்சி தலைவர்கள் பரஸ்பரம் குற்றசாட்டு தெரிவித்து வருகின்றனர்



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது: கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் காங்கிரஸ் கட்சி பள்ளிகளை கட்டியது, ஆனால் மோடி ஒரு போதும் படிக்கச்சொல்லவில்லை. பெரியவர்கள் கற்று கொள்ளும் திட்டங்களை காங்., அமைத்தது. மோடி அங்கேயும் கற்கவில்லை. பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்டாலும் நாட்டின் மக்கள் பிச்சைக்காரர்களாகி உள்ளனர் என பதிவிட்டிருந்தார்.

இது குறித்து மாநில காங்., கட்சியின் செய்தி தொடர்பாளர் லாவண்யா பல்லால் கூறுகையில் டுவிட்டரில் வந்த கருத்து துரதிருஷ்டவசமானது. இது குறித்து விசாரணை நடத்தப்படும். அதே நேரத்தில் டுவிட்டை திரும்ப பெறவோ, மன்னிப்பு கேட்கவோ காரணம் தெரியவில்லை என கூறினார்.

சிவகுமாரின் டுவிட்டர் குறித்து பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து சிவகுமார் மீண்டும் பதிவிட்ட டுவிட்டரில் தன்னுடைய கருத்துக்களை நீக்குவதாகவும், அரசியலில் மரியாதைக்குரியவர்களாக இருக்க வேண்டும் என்று நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

இதனிடையே மாநில பா.ஜ., செய்தி தொடர்பாளர் மாளவிகா அவினாஷ் கூறுகையில் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே இந்தளவிற்கு கீழிறங்க முடியும். கருத்துக்கு பதில் அளிப்பதற்கு கூட தகுதியற்றது என கூறினார்.

மேலும் காங்கிரஸ் மாநில தலைவர் நளின் குமார் கடீல் கூறுகையில் ராகுல் யார்? நான் அதை சொல்லவில்லை. அவர் போதைக்கு அடிமையானவர் என கூறினார்.


latest tamil news



இதுகுறித்து சிவகுமார் கூறுகையில் நேற்றே தன்னுடை பதிவை நீக்கி விட்டதாகவும், இதனை பா.ஜ., ஏற்றுக்கொள்ளும் என நம்புகிறேன். ராகுல் குறித்த தவறான மற்றும் சட்ட விரோத கருத்துக்களுக்கு தங்களின் மாநில தலைவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறினார்.

வரும் 30ம் தேதி கர்நாடக மாநிலத்தில் இரண்டு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Duruvesan - Dharmapuri,இந்தியா
20-அக்-202106:57:20 IST Report Abuse
Duruvesan மோடியை எவ்வளவு தூறுகிறார்களோ அவ்வளவும் இறைவன் அருளால் அவருக்கு நல்லதே ஆகிறது,
Rate this:
Cancel
Kalaiselvan Periasamy - kuala lumpur,மலேஷியா
20-அக்-202105:49:39 IST Report Abuse
Kalaiselvan Periasamy இதில் இருந்து ஒன்று நன்றாக புரிகிறது . கர்னாடக அரசியல்வாதிகள் சிலர் கேவலமான பிறப்புகள் என்று . யாரையும் அநாகரீகமாகவோ அல்லது உண்மைக்கு புறம்பாக பேசுவது தரமற்றவர்களின் செயல் . இது கூட தெரியாமல் அரசியலுக்கு வரும் இவர்களை மக்கள் கட்சி பேதம் பார்க்காமல் புறக்கணிக்க வேண்டும் . செய்வீர்களா இந்திய மக்களே
Rate this:
Cancel
BALU - HOSUR,இந்தியா
19-அக்-202122:41:42 IST Report Abuse
BALU காங்கிரஸ் ராகுல், பிரியங்கா,சோனியா, நேரு இவர்களின் கடந்தகால தொழில்களை பழக்கங்களை தொடர்புகளை தோண்டிப் பார்த்தால் காங்கிரஸ் மட்டுமல்ல இந்தியாவே நாறிவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X