பொது செய்தி

இந்தியா

பேப் இந்தியா தீபாவளி ஆடை விளம்பரத்தில் உருது: எதிர்ப்பால் நீக்கம்

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
புது டில்லி: கைவினை ஆடைகள் விற்கும் 'பேப் இந்தியா' நிறுவனம், 'ஜஷ்நே-ரிவாஸ்' (பாரம்பரியத்தின் கொண்டாட்டம்) என்ற உருது பெயரில் தீபாவளி ஆடை ரகங்களை அறிமுகப்படுத்தியதாக சர்ச்சை எழுந்தது. அதனைத் தொடர்ந்து அவ்விளம்பரம் நீக்கப்பட்டது.தீபாவளி பண்டிகை நெருங்குவதால், வாடிக்கையாளர்களை கவர அனைத்து ஆடை நிறுவனங்களும், புது புது விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன. அந்த

புது டில்லி: கைவினை ஆடைகள் விற்கும் 'பேப் இந்தியா' நிறுவனம், 'ஜஷ்நே-ரிவாஸ்' (பாரம்பரியத்தின் கொண்டாட்டம்) என்ற உருது பெயரில் தீபாவளி ஆடை ரகங்களை அறிமுகப்படுத்தியதாக சர்ச்சை எழுந்தது. அதனைத் தொடர்ந்து அவ்விளம்பரம் நீக்கப்பட்டது.latest tamil news
தீபாவளி பண்டிகை நெருங்குவதால், வாடிக்கையாளர்களை கவர அனைத்து ஆடை நிறுவனங்களும், புது புது விளம்பரங்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் கைவினை ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை செய்யும் பேப் இந்தியா நிறுவனமும் ஒரு விளம்பரம் வெளியிட்டது. “அன்பு மற்றும் ஒளியின் பண்டிகையை நாங்கள் வரவேற்கிறோம், ஜஷ்நே-ரிவாஸ் என்பது இந்திய கலாச்சாரத்திற்கு அழகாக மரியாதை செய்யும் ரகங்கள்” என குறிப்பிட்டிருந்தது.

இந்த விளம்பரத்திற்கு பா.ஜ.க., உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி.,யும், பா.ஜ.க., இளைஞரணி செயலாளருமான தேஜஸ்வி சூர்யா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “ஹிந்து பண்டிகைகளைத் திட்டமிட்டு மாற்றும் முயற்சி இது.” என கண்டித்திருந்தார். இதனால் அவ்விளம்பரத்தை பேப் இந்தியா நீக்கிவிட்டது. அவ்விளம்பரம் தீபாவளி ஆடை ரகங்களுக்கான விளம்பரம் இல்லை என அதன் செய்தித் தொடர்பாளர் விளக்கமளித்துள்ளார். தீபாவளி ரகங்களை 'ஜில்மில் சே தீபாவளி' என்ற பெயரில் இனி தான் வெளியிட போகிறோம் என கூறியுள்ளார்.


latest tamil newsஉருது மொழிக்காக அவ்விளம்பரத்தை எதிர்க்க வேண்டுமா என மற்றொரு தரப்பினர் வாதிடுகின்றனர். எத்தனையோ உருது கவிஞர்களை, இலக்கியங்களை இந்நாடு கொண்டாடுகிறது. இந்திய விடுதலைக்காக போராடி தூக்கு தண்டனை பெற்ற பகத் சிங், தூக்கிலிடப்படுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் தனது சகோதரருக்கு உருதுவில் தான் கடிதம் எழுதினார் என சிலர் குறிப்பிட்டுள்ளனர். உருது மொழியை பொதுவாக பயன்படுத்தினால் தவறில்லை, ஹிந்துக்கள் பண்டிகைக்கு அதனை பயன்படுத்துவது தான் சர்ச்சைக்கு காரணம், எனவே அதனை கண்டிப்பதில் தவறில்லை என அதற்கு சிலர் பதிலளித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
20-அக்-202111:24:18 IST Report Abuse
Rasheel அரபு, துருக்கிய மற்றும் ஆப்கானிய மொழி கலந்தது தான் உருது. பாலைவனத்தின் இந்த நாட்டை ஆக்ரமித்து பல ஆயிரம் பேரை கொன்றதன் அடையாளம் தான் உருது மொழி. உதாரணம், மதுரை மீது படையெடுத்த கோரி மொஹம்மதுவின் படை தளபதி பல ஆண்டுகள் காலம் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை வன்முறை மூலம் மூடி வைத்தது வரலாறு. பின்னால் லஞ்சம் பெற்று கொண்டு கோவிலை திறந்தான். அவனது படையெடுப்பின் எச்சம் தான் மதுரை கோரி பாளையம் என்ற ஊர். அதேபோல பாலைவன ஆட்கள் தீபாவளி உண்மை தன்மையை கெடுக்க செய்யும் உட்குத்து வேலைதான் இது. இதை நாம் அனுமதிக்க கூடாது.
Rate this:
Cancel
Sathya -  ( Posted via: Dinamalar Android App )
20-அக்-202106:59:17 IST Report Abuse
Sathya Simple Boycott Fabindia Products at all times.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
20-அக்-202100:50:01 IST Report Abuse
Natarajan Ramanathan ஒளியின் பண்டிகை என்று சொல்லிவிட்டு பிறகு அது தீபாவளி விளம்பரம் அல்ல என்று உளறுவதாலேயே Fab India வின் தடுமாற்றம் அம்பலமாகி விட்டது. இந்துக்களின் பண்டிகையான தீபாவளிக்கும் உருதுவுக்கும் என்ன சம்பந்தம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X