நிரவ் மோடி கோரிக்கை: நிராகரித்தது அமெரிக்க கோர்ட்

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
வாஷிங்டன் : தன் மீதான மோசடி புகார்களை ரத்து செய்யக் கோரி, இந்தியாவைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி தொடர்ந்த வழக்கை, அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது; இந்தியாவைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பல நாடுகளில் வைர வியாபாரம் செய்து வந்தார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் 28 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி ஏமாற்றி லண்டன் தப்பி சென்றார். அவரை நாடு கடத்தி அழைத்து
நிரவ் மோடி, கோரிக்கை, நிராகரிப்பு, அமெரிக்க, கோர்ட்

வாஷிங்டன் : தன் மீதான மோசடி புகார்களை ரத்து செய்யக் கோரி, இந்தியாவைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி தொடர்ந்த வழக்கை, அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது;

இந்தியாவைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பல நாடுகளில் வைர வியாபாரம் செய்து வந்தார். பஞ்சாப் நேஷனல் வங்கியில் 28 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி ஏமாற்றி லண்டன் தப்பி சென்றார். அவரை நாடு கடத்தி அழைத்து வருவதற்காக லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.


latest tamil newsஇந்நிலையில் அமெரிக்காவில் மூன்று வைர நிறுவனங்களை, நிரவ் மோடி மற்றும் அவரது கூட்டாளிகள் நடத்தி வந்தனர்.இந்த நிறுவனங்களின் பெயரை பயன்படுத்தி, பஞ்சாப் நேஷனல் வங்கி உட்பட பல வங்கிகளில் நிரவ் மோடி பல கோடி ரூபாய் மோசடி செய்து உள்ளார். இந்த நிறுவனங்களை திவாலானதாக அறிவிக்கக் கோரி, நியூயார்க் நகரில் உள்ள வங்கி திவால் நீதிமன்றத்தில் நிரவ் மோடி உள்ளிட்டோர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக கடன் அளித்தோருக்கு ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்ய, ரூ.112 கோடியை நிரவ் மோடி உள்ளிட்டோரிடம் இருந்து வசூலிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டது. மோசடி குற்றச்சாட்டுகள் கூறியதை எதிர்த்து, நிரவ் மோடி உள்ளிட்ட மூவரும் நியூயார்க் வங்கி திவால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால் அவர்களது கோரிக்கையை ஏற்க மறுத்து, மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatakrishnan - Mumbai,இந்தியா
20-அக்-202100:23:23 IST Report Abuse
Venkatakrishnan புனித பாரதத்தின் நிகரில்லா பாதுகாவலன் பிரதமர் திரு மோடி அவர்களின் கருப்பு பண ஒழிப்பின் சாதனைகள் பாடப்புத்தகத்தில் வர வேண்டும்.......
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
19-அக்-202121:37:03 IST Report Abuse
Samathuvan Why NM has to beg US. It is better if he applies membership in BJB and he can contest in next election.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
19-அக்-202120:22:52 IST Report Abuse
Ramesh Sargam அப்புறம் என்ன? உடனே அவனை இந்தியாவுக்கு பேக் பண்ணவேண்டியதுதானே... ஆனா ஒன்னு, இங்க மட்டும் என்ன பெரிசா ஆகப்போவுது? பெயில் கொடுத்து வெளியில் விட்டுவிடுவார்கள். அவன் மீண்டும் தன் மோசடி வேளையில் இறங்கிவிடுவான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X