பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : அக் 19, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
அக்., 20, 2014திருச்சி அருகே உள்ள முசிறியில், 1925ம் ஆண்டு பிறந்தவர், ராஜம். பள்ளிக்குச் சென்று முறையான கல்வி பயிலாதவர். 15வது வயதிலேயே, கிருஷ்ணனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். சென்னையில் குடியேறியவர், கணவரின் உதவியால் பல புத்தகங்களை படித்து, பின் தானே கதைகளை எழுத ஆரம்பித்தார்.துாத்துக்குடி சென்று அங்குள்ள மீனவர்களின் நிலையை நேரடியாகக் கண்டு, 'கரிப்பு மணிகள்'

இதே நாளில் அன்று


அக்., 20, 2014



திருச்சி அருகே உள்ள முசிறியில், 1925ம் ஆண்டு பிறந்தவர், ராஜம். பள்ளிக்குச் சென்று முறையான கல்வி பயிலாதவர். 15வது வயதிலேயே, கிருஷ்ணனுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். சென்னையில் குடியேறியவர், கணவரின் உதவியால் பல புத்தகங்களை படித்து, பின் தானே கதைகளை எழுத ஆரம்பித்தார்.துாத்துக்குடி சென்று அங்குள்ள மீனவர்களின் நிலையை நேரடியாகக் கண்டு, 'கரிப்பு மணிகள்' என்ற நாவலையும்; பீஹார் கொள்ளை கூட்டத் தலைவன் டாகுமான்சியை சந்தித்து, 'முள்ளும் மலரும்' என்ற நாவலையும் எழுதினார். 200 சிறுகதைகள், மூன்று வாழ்க்கை வரலாற்று நுால்கள், 20 வானொலி நாடகங்கள், 20-க்கும் மேற்பட்ட புதினங்கள் எழுதியுள்ளார். முதன்முறையாக உயிருடன் இருந்தபோதே அரசுடைமை ஆக்கப்பட்டது இவரது நுால்களே. சாகித்ய அகாடமி விருது பெற்ற முதல் பெண் எழுத்தாளர் என்ற பெருமையும் பெற்றார். 'நியூயார்க் ஹெரால்ட் ட்ரிப்யூன், சோவியத் லாண்ட் நேரு' உட்பட ஏராளமான விருதுகள் பெற்றுள்ளார்.கடந்த 2014 அக்., 20ம் தேதி தன் 89வது வயதில் இயற்கை எய்தினார்.எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் காலமான தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
20-அக்-202105:09:54 IST Report Abuse
Bhaskaran மண்ணகத்து பூந்துளிகள் குறிஞ்சித்தேன் அமுதமாகி வருக மலர்கள் பெண்குரல் என்று அவரின் அனைத்து புதினங்களும் அருமையாக இருக்கும் நாட்டுடமை ஆக்கப்பட்ட பணத்துக்கான காசோலையை இப்போதைய முதல்வர் ஸ்டாலின் உடல்நலம் குன்றியிருந்த ராஜம் கிருஷ்ணன் வீட்டுக்கு சென்று கொடுத்ததாக படித்துள்ளேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X