சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

1,200 மதிப்பெண் பெற்று சாதனை!

Added : அக் 19, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
காது கேட்காத, வாய் பேசாத ஆன் மரியா குடும்பமே படித்துக் கரைதேற உதவும், பக்கத்து வீட்டுக்காரரான ஜிஸ்னா: ஆன் மரியாவுக்கு நன்றாக ஓவியம் வரைய வரும். வண்ணக் காகிதங்களைக் கொண்டு கலைப் பொருட்கள் செய்வார். படிப்புடன் விளையாட்டிலும் ஜொலிப்பவர். பாருங்கள்... வீடு முழுதும் பதக்கங்கள்... டிராபிகள் நிறைந்துள்ளதை!அப்பா கிறிஸ்டி வயது 53; அம்மா டெசிக்கு, 52 மற்றும்அண்ணன் அதுலுக்குவயது 20.
சொல்கிறார்கள்

காது கேட்காத, வாய் பேசாத ஆன் மரியா குடும்பமே படித்துக் கரைதேற உதவும், பக்கத்து வீட்டுக்காரரான ஜிஸ்னா: ஆன் மரியாவுக்கு நன்றாக ஓவியம் வரைய வரும். வண்ணக் காகிதங்களைக் கொண்டு கலைப் பொருட்கள் செய்வார். படிப்புடன் விளையாட்டிலும் ஜொலிப்பவர். பாருங்கள்... வீடு முழுதும் பதக்கங்கள்... டிராபிகள் நிறைந்துள்ளதை!அப்பா கிறிஸ்டி வயது 53; அம்மா டெசிக்கு, 52 மற்றும்அண்ணன் அதுலுக்குவயது 20. பிறவியில் இருந்தே பெற்றோருக்கும் காது கேட்காது. பிறர் பேசினாலும்பேசும் ஒலியைக் கேட்க முடியாமல்,நிசப்தத்தில் வளர்ந்ததால் பேசும் பழக்கம்இவர்களுக்கு ஏற்படவே இல்லை. அவர்கள் குடும்பம்சேர்ந்து ஆலோசித்து, அப்பாவுக்கும், அம்மாவுக்கும் திருமணம் செய்து வைத்தனர். அவர்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கும் அதே இயலாமை வரும் என்று அவர்கள் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.இனி ஆன் மரியா...அப்பா தையல் தொழில் செய்து வருகிறார்; அம்மா வீட்டைக் கவனித்துக் கொள்வார். நானும் அண்ணனும், மாணிக்கமங்கலத்தில் இருக்கும் காது கேளாதோர், பேசாதோருக்கான பள்ளியில் தங்கிப் படித்தோம். நான் 10ம் வகுப்பில் 'டிஸ்டிங்ஷனில்' தேர்வானேன். இப்போது பிளஸ் 2 தேர்வில் 1,200 என, மொத்த மதிப்பெண்ணும் பெற்று தேர்வாகியுள்ளேன். கொரோனா காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால், 'ஆன் லைன்' வகுப்புகளில் படிக்க வேண்டி இருந்தது; ஆனால், வீட்டில் மடிக்கணினியோ, மொபைல்போனோ இல்லை.எனவே, அம்மாவின் பழைய கைபேசியில் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்றாலும், ஆசிரியர்கள் சொல்வதைப் புரிந்து கொள்ள மிகவும் சிரமமாக இருந்தது. இப்போது கணினி மற்றும் காமர்ஸ் பட்டப்படிப்பில் சேர்ந்துள்ளேன். நன்றாக படித்து, அரசு அல்லது தனியார்த் துறையில் வேலை பார்க்க வேண்டும் என்பது தான் லட்சியம். எனக்கு விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என்ற குட்டி கனவும் உண்டு. என் வெற்றிக் கதை, சமூக வலைதளங்களில் வைரல் ஆனதால், மடிக்கணினி, டேப் போன்றவற்றை சிலர் அன்பளிப்பாக வழங்கினர்.பேச, கேட்க இயலாமல் போனாலும், போதுமான அறிவைக் கொடுத்திருக்கும் இறைவனுக்கு நன்றி!

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
20-அக்-202116:52:19 IST Report Abuse
THINAKAREN KARAMANI உனது இலட்சியங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Ranjith Rajan - CHENNAI,சிங்கப்பூர்
20-அக்-202115:25:33 IST Report Abuse
Ranjith Rajan வாழ்த்துக்கள் பாப்பா
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
20-அக்-202104:24:35 IST Report Abuse
NicoleThomson காது கேளாதது இயற்கை தந்த கோடை அம்மா நீ பல்லாண்டு வாழ இயற்க்கை துணை நிற்கட்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X