பொது செய்தி

இந்தியா

2ம் 'டோஸ்' தடுப்பூசியில் வேகம் : மாநிலங்களுக்கு வலியுறுத்தல்

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி :'மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பொதுமக்களுக்கு இரண்டாம் 'டோஸ்' தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த வேண்டும்' என, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜன., 16ல் பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்பட்டது. நேற்று வரை நாடு முழுதும் 99 கோடிக்கும் மேற்பட்ட 'டோஸ்' தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. இது
 2ம் 'டோஸ்', தடுப்பூசி, வேகம்,  மாநிலங்கள், வலியுறுத்தல்

புதுடில்லி :'மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பொதுமக்களுக்கு இரண்டாம் 'டோஸ்' தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த வேண்டும்' என, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜன., 16ல் பிரதமர் நரேந்திர மோடியால் துவக்கி வைக்கப்பட்டது. நேற்று வரை நாடு முழுதும் 99 கோடிக்கும் மேற்பட்ட 'டோஸ்' தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன. இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் இன்று (அக்.19) வெளியிட்ட அறிக்கை:


latest tamil news



தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவாக நடக்கின்றன. இன்று (அக்.19) 99 கோடியை கடந்த டோஸ்கள் எண்ணிக்கை விரைவில், 100 கோடியை எட்டும். தடுப்பூசி பணிகள் தொடர்பாக மாநில சுகாதார துறை செயலர்கள் மற்றும் தேசிய சுகாதார பணிகள் இயக்குனர்களுடன், மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது பொதுமக்களில் பலரும் இரண்டாம் டோஸ் செலுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை என சுட்டிக்காட்டப் பட்டது.இந்த பிரச்னைக்கு சுமுக தீர்வு காணும் வகையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இரண்டாம் டோஸ் செலுத்தும் பணிகளை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.வெளிநாட்டு பயணத்திற்கான புதிய வழிகாட்டுதல்களை உருவாக்கும் பரிந்துரைகளை, மாநிலங்களிடம் மத்திய அரசு கோரி உள்ளது.இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
20-அக்-202109:51:04 IST Report Abuse
duruvasar ஸ்டிக்கர் ரெடியா இருக்குங்க. மருந்த மட்டும் குடுத்துட்டு அப்பறம் பாருங்க. புன்னகை மன்னன், பகுத்தறிவண்ணன் தமிழனுக்காக.. .. பாடல் கேட்டுக்கொண்டு ஊசி போட்டுப் பாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X