உத்தரகண்டில் பெய்யும் பலத்த மழைக்கு 34 பேர் பலி! நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் பலத்த சேதம்

Updated : அக் 21, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
டேராடூன் :உத்தரகண்ட் மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. மலைப் பிரதேசம் என்பதால் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, 34 பேர் பலியாகி உள்ளனர்; பலரை காணவில்லை.உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து
 உத்தரகண்ட்,  பலத்த மழை, 34 பேர் பலி,வெள்ளப்பெருக்கு

டேராடூன் :உத்தரகண்ட் மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன. மலைப் பிரதேசம் என்பதால் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, 34 பேர் பலியாகி உள்ளனர்; பலரை காணவில்லை.

உத்தரகண்டில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால், மாநிலத்தில் பல பகுதிகள் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.


பள்ளிகளுக்கு விடுமுறைநைனிடால் மாவட்டம் நாட்டின் மற்ற பகுதிகளிலிருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆறுகளிலும் அபாய அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.நைனிடால் மாவட்டத்தில் உள்ள ராம்கார்க் கிராமத்தில் மேக வெடிப்பு ஏற்பட்டு, மழை கொட்டி தீர்த்தது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் கிராம மக்கள் சிக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சம்பவ இடத்திற்கு போலீசார், மாவட்ட நிர்வாகம் மற்றும் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்.

கவுலான் நதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் முக்கிய பகுதிகளை இணைக்கும் பாலத்தின் ஒரு பகுதி சேதமடைந்தது. தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இமயமலை அடிவார பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கேதார்நாத், பத்ரிநாத் கோவில்களுக்கு செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது.
முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியதாவது:மழை, வெள்ளம், நிலச்சரிவால் உத்தரகண்ட் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பல வீடுகள், பாலங்கள் சேதமடைந்துள்ளன.வெள்ளத்தால் ௬௫ சதவீதசாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, அவர்களுக்கு உணவு உள்ளிட்ட நிவாரண உதவிகள் வழங்கும் பணி விரைவுப்படுத்தப்பட்டுள்ளது.மழை, வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றுக்கு நேபாளத்தை சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் உட்பட, 34 பேர் இறந்துவிட்டனர்; பலரை காணவில்லை.பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் டெலிபோனில் தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தனர்.


யாத்திரை வேண்டாம்தேவையான உதவிகளை உடனே செய்வதாக இருவரும் உறுதியளித்தனர். மீட்பு பணிகளில் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தேசிய பேரீடர் மீட்பு படையின் ௧௦ குழுக்களை உத்தரகண்டிற்கு அனுப்பி வைப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். மழை, வெள்ளத்திலிருந்து மாநிலம் மீளும் வரை வெளி மாநிலத்தவர்கள் உட்பட யாரும், உத்தரகண்டில் எந்த யாத்திரையும் மேற்கொள்ள வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.குஜராத் மாநிலத்தை சேர்ந்த ௧௦௦க்கும் அதிகமானோர் உத்தரகண்டில் 'சார்தாம்' யாத்திரை மேற்கொண்டுள்ளனர்.வெள்ளம் காரணமாக யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளதால், அவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


கேரளாவில் 'ஆரஞ்ச் அலர்ட்'கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கோட்டயம், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில், வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது,அதில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் முப்படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையே கேரளாவில் மழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. திருவனந்தபுரம், பத்தினம் திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி உள்ளிட்ட11 மாவட்டங்களுக்கு, 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அன்பு - தஞ்சை,கனடா
20-அக்-202101:58:34 IST Report Abuse
அன்பு சுற்றுசூழலை பாதுகாக்காவிடில், இதுபோன்ற இயற்கை விளைவுகளை அடிக்கடி சந்திக்க நேரிடும். அதனால் தான் மலைகள், ஏரிகள், குளங்கள், ஆற்று மணல் போன்றவற்றை பேணிக்காப்பது நலம். இதோடு, காற்று மாசு, ஒலி மாசுவையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். ஆற்றில் சாயத்தை கலப்பது. கூடுதல் விளைச்சலிற்காக அதிக அளவு உரத்தை போடுவது போன்றவற்றை தடுக்க வேண்டும். கெமிக்கலை குறைவாக பயன்படுத்துவது நல்லது. இந்தியாவில் ஜுரத்திற்கு சென்றாலும், பத்து மாத்திரை எழுதி கொடுத்து, பணத்திற்காக கல்லீரலை டாக்டர் காலி செய்துவிடுகிறார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X