பொது செய்தி

இந்தியா

காஷ்மீர் எல்லை பகுதியில் தலைமை தளபதி ஆய்வு

Updated : அக் 21, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஜம்மு :ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு, இரண்டு நாள் பயணமாக சென்ற ராணுவ தலைமை தளபதி நரவானே, ஜம்முவில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசமாக்கப்பட்ட பின் பயங்கரவாத நடவடிக்கைகள் பெருமளவில் குறைந்திருந்தன. 40 ஆண்டுகளுக்கு பின் காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை
காஷ்மீர் எல்லை பகுதி, தலைமை, தளபதி ஆய்வு

ஜம்மு :ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு, இரண்டு நாள் பயணமாக சென்ற ராணுவ தலைமை தளபதி நரவானே, ஜம்முவில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு
பகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசமாக்கப்பட்ட பின் பயங்கரவாத நடவடிக்கைகள் பெருமளவில் குறைந்திருந்தன. 40 ஆண்டுகளுக்கு பின் காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்பிஉள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், சமீபகாலமாக மீண்டும் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. பாதுகாப்பு படையினர் மற்றும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதையடுத்து ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்ய இரண்டு நாள் பயணமாக ஜம்மு - காஷ்மீருக்கு ராணுவ தலைமை தளபதி
நரவானே நேற்று முன்தினம் சென்றார்.பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய வனப்பகுதியை பார்வையிட்டார். நேற்று காலை ஜம்முவில் உள்ள எல்லை பகுதிக்கு சென்று பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகள் ஊடுருவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் கேட்டறிந்தார்.


சி.ஆர்.பி.எப்., வீரர் தற்கொலை



ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசம், ராம்பன் மாவட்டத்தில் உள்ள சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினரின் முகாம் உள்ளது. இங்கு கான்ஸ்டபிளாக பணியாற்றி வந்த பீஹாரைச் சேர்ந்த ராஜிவ் ரஞ்சன், நேற்று ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரின் உடல் கைப்பற்றப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மன அழுத்தம் காரணமாக, துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு ராஜிவ் ரஞ்சன் தற்கொலை செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-அக்-202107:41:25 IST Report Abuse
அப்புசாமி எதையும் சமாளிப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X