ஜம்மு - காஷ்மீருக்கு அமித் ஷா 3 நாள் பயணம்

Updated : அக் 21, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
உள்துறை அமைச்சர் அமித் ஷா மூன்று நாள் பயணமாக, வரும் 23ல் ஜம்மு - காஷ்மீர் செல்ல உள்ளார். இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். ஜம்மு - காஷ்மீரில் கடந்த 16 நாட்களில் மட்டும் 11 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு படையினர் மற்றும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர். காங்., விமர்சனம்
ஜம்மு - காஷ்மீர், 3 நாள் பயணம், அமித் ஷா ஆலோசனை

உள்துறை அமைச்சர் அமித் ஷா மூன்று நாள் பயணமாக, வரும் 23ல் ஜம்மு - காஷ்மீர் செல்ல உள்ளார். இது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
ஜம்மு - காஷ்மீரில் கடந்த 16 நாட்களில் மட்டும் 11 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு படையினர் மற்றும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து
தாக்குதல் நடத்துகின்றனர்.


காங்., விமர்சனம்



வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களை இலக்காக நிர்ணயித்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் நடந்த காங்., செயற்குழு கூட்டத்தில், இந்த விவகாரம் குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மேலும், காஷ்மீர் காங்., பொறுப்பாளர்களை அழைத்து, டில்லியில் ராகுல் முக்கிய ஆலோசனையும் நடத்தினார்.

இந்நிலையில், பிரதமர்நரேந்திர மோடியை நேற்று அவரது இல்லத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சந்தித்து பேசினார். காஷ்மீரில் நடக்கும் தாக்குதல்கள் மற்றும் அங்கு நிலவும் சூழல் குறித்து அவர் விளக்கியதாக தெரிகிறது.இது குறித்து மத்தியஅரசு வட்டாரங்கள் கூறியதாவது:உள்நாட்டு பாதுகாப்பு குறித்து டில்லியில் மாநில டி.ஜி.பி.,க்கள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உளவுத்துறை தலைவர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோருடன், உள்துறை அமைச்சர் அமித் ஷா சமீபத்தில் தொடர் ஆலோசனை நடத்தினார்.
அந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்ட விபரங்கள், எடுக்கப்பட்ட முடிவுகள் ஆகியவை குறித்தும் நேற்றைய சந்திப்பின் போது பிரதமரிடம் அமித் ஷா விரிவாக விளக்கம் அளித்தார்.அப்போது பிரதமர் சில கேள்விகள் கேட்டதுடன், கூடுதலாக சில அறிவுறுத்தல்களையும் வழங்கியதாக தெரிகிறது.ஜம்மு - காஷ்மீருக்கு அமித் ஷா மூன்று நாள் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


சவாலை முறியடிக்க திட்டம்



ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின், பிரதமரின் யோசனையின்படி மத்திய அமைச்சர்கள் பலரும் அங்கு சென்று, பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்து ஆய்வு செய்து வந்தனர்.

இந்த பயணங்களின் முத்தாய்ப்பாக, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. வரும் 23, 24, 25 ஆகிய மூன்று நாட்களும், அவர் ஜம்மு - காஷ்மீரில் பல நலத்திட்டங்களை பார்வையிடுவதோடு, புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்ட உள்ளார்.ஏற்கனவே இந்த பயணம் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சமீபகாலமாக அங்கு திடீரென பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரித்து உள்ளன. இது தான் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் சந்திப்பில் முக்கியமாக இடம்பெற்றது.

தற்போது அங்குள்ள ராணுவம், உள்ளூர் போலீசார் ஆகியோரோடு சேர்ந்து, புதிதாக மத்திய அரசின் பாதுகாப்பு நிபுணர்கள் அடங்கிய குழு அமைத்து, அதையும் களத்தில் இறக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.இக்குழுவில் உளவுத்துறை அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு ஆணைய அதிகாரிகள், மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் இடம் பெறுவர்.இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஜம்மு - காஷ்மீரில் எழுந்துள்ள தற்போதைய சவாலை முறியடிப்பது என்றும் திட்டமிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.- நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
20-அக்-202118:43:59 IST Report Abuse
Vijay D Ratnam பிரதமர் மோடி காஷ்மீர் போகிறார், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் காஷ்மீர் போகிறார், உள்துறை அமைச்சர் அமித்ஷா காஷ்மீர் போகிறார், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் காஷ்மீர் போகிறார், வரிசையாக ரஃபேல் போர் விமானங்கள் வந்து சேர்ந்துகொண்டு இருக்கிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தாண்டி மொத்த பாகிஸ்தானுக்கு ஆப்பு ரெடியாகி கொண்டு இருக்கு போல. இனி கதற கதற ஆப்பு அடிக்கப்படும் போல. இஸ்லாமிய பயங்கரவாதிகளை உருவாக்கும் பாகிஸ்தான் மீது உலக நாடுகள் செம்ம கடுப்பில் இருக்கிறது. இந்தியாவுக்கு இதை விட அருமையான வாய்ப்பு லேசில் கிடைக்காது. சீனாவையும் துருக்கியையும் தவிர எவனும் கேட்கமாட்டான், அவனுங்கப்பேச்சை எவனும் மதிக்கவும் மாட்டான். மாட்டை தொழுவத்தில் கட்டி வச்சி அடிச்சாதான் அடி சிந்தாமல் சிதறாமல் விழும் என்பது மாதிரி நல்லா வச்சி செய்யலாம். என்ன இங்கே மைனாரிட்டி வாக்குகளை அண்டி பொழப்பு நடத்தும் அரசியல்வியாதிகள், அவிங்கள் அண்டி வயிறு வளர்க்கும் அல்லக்கைகள், ஆர்.எஸ்.பி மீடியாக்கள் நாலு நாளைக்கு கதறுவாய்ங்க. அவ்ளோதான். பாகிஸ்தான் இனி அவர்கள் பகுதியை மீட்க ஒரு நூற்றாண்டுக்கு போராடிக்கொண்டே இருக்கோணும்.
Rate this:
Cancel
20-அக்-202107:42:19 IST Report Abuse
அப்புசாமி போன வாரம் தானே போனாரு...
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,கனடா
20-அக்-202102:02:45 IST Report Abuse
அன்பு வெறுமனே ராணுவத்துடன் பேசிவிட்டு, டெல்லி வந்துவிட கூடாது. அங்குள்ள பொதுமக்களுடன் பேசி, அங்குள்ள சிறு சிறு பஞ்சாயத்து தலைவர்களை கூட்டி, அவர்களுடன் பேசி, காஷ்மீரில் வேலை செய்யும் வெளிமாநிலத்தோர் ஓடிவிட்டால், காஷ்மீர் மக்களின் கதி என்னவாகும் என்று எடுத்துரைக்க வேண்டும். மேலும், பொதுப்பணி மேல் அதிகாரிகள், ஆசிரியர்களிடம் பேசி, நிலவரத்தை கட்டுக்குள் கொண்டுவருவது, காஷ்மீர் மக்களுக்கு நலன் பயப்பதை எடுத்துரைப்பதும் அவசியம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X