அரசியல் செய்தி

தமிழ்நாடு

பொய் வழக்குகளுக்கு அ.தி.மு.க., அஞ்சாது : பழனிசாமி சவால்

Updated : அக் 21, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
தலைவாசல்: ''அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர், நிர்வாகிகள் மீது போடப்படும் பொய் வழக்குகளுக்கு அ.தி.மு.க., அஞ்சாது,'' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசினார்.அ.தி.மு.க., 50ம் ஆண்டு பொன் விழாவையொட்டி, சேலம் மாவட்டம், தலைவாசல் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், நேற்று கட்சி கொடியேற்றி, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசியதாவது:எம்.ஜி.ஆர்., இருந்தபோது பல்வேறு சோதனைகளுக்கு ஆளானார்.
பொய் வழக்குகள். அ.தி.மு.க., அஞ்சாது  , பழனிசாமி சவால்

தலைவாசல்: ''அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர், நிர்வாகிகள் மீது போடப்படும் பொய் வழக்குகளுக்கு அ.தி.மு.க., அஞ்சாது,'' என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசினார்.
அ.தி.மு.க., 50ம் ஆண்டு பொன் விழாவையொட்டி, சேலம் மாவட்டம், தலைவாசல் பஸ் ஸ்டாண்ட் பகுதியில், நேற்று கட்சி கொடியேற்றி, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பேசியதாவது:
எம்.ஜி.ஆர்., இருந்தபோது பல்வேறு சோதனைகளுக்கு ஆளானார். அதையெல்லாம் உடைத்து சாதனை படைத்து, அவர் உருவாக்கிய அ.தி.மு.க., 50 ஆண்டு காலத்தில், 30 ஆண்டுகள் ஆட்சி செய்துள்ளது.
வெறும் நான்கைந்து வாக்குறுதிகளை கணக்குக்கு செய்துவிட்டு, 202 தேர்தல் வாக்குறுதிகளை, தி.மு.க., அரசு நிறைவேற்றியதாக, முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு, தற்போது முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார். தி.மு.க., அரசால், 'நீட்' தேர்வை எந்த காலத்திலும் ரத்து செய்ய முடியாது.
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் மீது தி.மு.க., அரசின் துாண்டுதலால் பொய் வழக்கு போடப்படுகிறது. இந்த வழக்குகளுக்கு அ.தி.மு.க., அஞ்சாது.
இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
20-அக்-202119:35:34 IST Report Abuse
Kasimani Baskaran "நான்கைந்து வாக்குறுதிகளை கணக்குக்கு செய்துவிட்டு, 202 தேர்தல் வாக்குறுதிகளை, தி.மு.க., அரசு நிறைவேற்றியதாக, முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார்" - திமுக முன்னர் கேட்டது போலவே நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளைப் பற்றி வெள்ளை அறிக்கை கொடுக்கச்சொல்லலாமே.
Rate this:
Cancel
padmanabhan - coimabatore,இந்தியா
20-அக்-202113:11:03 IST Report Abuse
padmanabhan After destroying ADMK and Tamil Hindus now no use
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
20-அக்-202109:29:17 IST Report Abuse
S.Baliah Seer எந்த ஒரு மனிதனாய் இருந்தாலும், தன்மானம் வேண்டும். எடப்பாடி மீது ஏற்கனவே கொலை வழக்கு பதிவாகி உள்ளது தற்போது கொடநாட்டு கொலை, கொள்ளையிலும் இவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இவர் ஆட்சியில் நடந்தவைகளுக்கு திமுக அரசு எப்படி பொய் வழக்கு போடமுடியும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X