அரசியல் செய்தி

தமிழ்நாடு

அண்ணாமலை கிளப்பிய புயல்: ஸ்டாலின் கவனிப்பாரா?

Updated : அக் 21, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (51)
Share
Advertisement
சென்னை :ஆளும்கட்சி பிரமுகர் ஒருவர், நலிவடைந்த மின் நிலையத்தை வாங்கி, அதன் வாயிலாக, மின் வாரியத்திடம் 5,000 கோடி ரூபாய்க்கு மின் கொள்முதல் ஒப்பந்தம் செய்ய இருப்பதாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை புகார் எழுப்பி உள்ளார்.இதில், முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.தமிழக மின் வாரியம், மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக, சொந்த மற்றும் மத்திய அரசின் மின்
அண்ணாமலை ,புயல்,  ஸ்டாலின் கவனிப்பாரா?


சென்னை :ஆளும்கட்சி பிரமுகர் ஒருவர், நலிவடைந்த மின் நிலையத்தை வாங்கி, அதன் வாயிலாக, மின் வாரியத்திடம் 5,000 கோடி ரூபாய்க்கு மின் கொள்முதல் ஒப்பந்தம் செய்ய இருப்பதாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை புகார் எழுப்பி உள்ளார்.இதில், முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக மின் வாரியம், மின் தேவையை பூர்த்தி செய்வதற்காக, சொந்த மற்றும் மத்திய அரசின் மின் நிலையங்கள் மட்டுமின்றி, பல்வேறு தனியார் நிறுவனங்களிடம் இருந்து, மின்சாரம் கொள்முதல் செய்கிறது.மின் வாரிய கடன், 1.59 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இதற்காக ஆண்டுக்கு, 16 ஆயிரம் கோடி ரூபாய் வட்டி செலுத்துகிறது.

இவ்வளவு கடன் ஏற்பட்டதற்கு, தனியார் நிறுவனங்களிடம், அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதே முக்கிய காரணம்.தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நேற்று முன்தினம் கூறியதாவது:தற்போது நலிவடைந்த நிலையில் உள்ள ஒரு மின் நிலையத்தை, ஆளும் கட்சி பிரமுகர் ஒருவர் வாங்கி, அதன் வாயிலாக, 5,000 கோடி ரூபாய்க்கு மின்சாரம் விற்க, தமிழக
மின் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்ய உள்ளார்.

ஆளும் கட்சியைச் சேர்ந்த சில அமைச்சர்களுக்கு லாபத்தை ஈட்டுவதற்காக தான் இந்த ஒப்பந்தம் நடக்கிறது. எந்த நிறுவனம், எந்த அமைச்சர் என்ற பெயரை, தற்போது வெளியிட விரும்பவில்லை.திரும்பவும் அவர்கள், 2006 - 11 பாதைக்கு போக மாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அப்படி போகும் போது, பா.ஜ.,வுக்கு வேறு வழியில்லை. ஒப்பந்தம் பேச்சு குறித்து, எங்களிடம் உள்ள ஆவணங்களை மக்கள் முன் வெளியிடுவோம்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

அண்ணாமலை பேசியது, மின் வாரியத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திஉள்ளது.மின் வாரிய வட்டாரம் கூறியதாவது:மின் வாரியம், கடும் நிதி நெருக்கடியில் இருப்பதற்கு, அதிக விலைக்கு மின்சாரம், நிலக்கரி, உபகரணங்கள் வாங்கியதே முக்கிய காரணம். தென் மாவட்டங்களில் உள்ள வறட்சியான மாவட்டத்தில், ஒரு தனியார் நிறுவனத்துக்கு, எரிவாயு மின் நிலையம் உள்ளது. அந்நிறுவனத்தை தான் சிலர் விலைக்கு வாங்கி, மின் வாரியத்துடன் கொள்முதல் ஒப்பந்தம் செய்ய முயற்சி நடப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்த சூழலில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, நலிவடைந்த நிறுவனத்தை ஆளும்கட்சி பிரமுகர் வாங்கி, 5,000 கோடி ரூபாய்க்கு மின்சாரம் விற்க, ஒப்பந்தம் செய்ய முயற்சிப்பதாக புகார் கூறியுள்ளார்.

மத்தியில் தனி மெஜாரிட்டியுடன் பா.ஜ., ஆட்சியில் உள்ளது. எனவே, அக்கட்சியின் மாநில தலைவர், எந்தவித ஆதாரமும் இல்லாமல் புகார் எழுப்ப மாட்டார்.இதனால், இந்த விவகாரம் தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி, அதிக விலைக்கு மின் வாரியம்,
மின் கொள்முதல் ஒப்பந்தம் செய்வதை தடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த வட்டாரம் கூறியது.


யூனிட் என்ன விலை?மின் வாரியம், குறுகிய காலம், நீண்ட காலம் என, மின் கொள்முதல் ஒப்பந்தம் செய்துள்ள நிறுவனங்கள் தவிர, உச்ச மின் தேவை உள்ள காலங்களில், மின்சார சந்தைகளில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்கிறது. தற்போது, நிலக்கரி தட்டுப்பாடால், மின்சார சந்தைகளில், ௧ யூனிட் 20 ரூபாய்க்கு மேல் மின்சாரம் விற்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன.
எனவே, மின்சார சந்தையில் தினமும் எவ்வளவு மின்சாரம் வாங்கப்படுகிறது; அதன் ௧ யூனிட் விலை ஆகிய விபரங்களை, மின் வாரியம் இணையதளத்தில் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-அக்-202121:30:31 IST Report Abuse
சம்பத் குமார் 1). we need justice.2). we want to work under Annamalai in kongu region .3). awe want to the government who support all type of people.4) let Governor and central government take of our freedom..,5). we are living in Tamilnadu without freedom.5). we are looking for freedom. thanks.
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
20-அக்-202121:25:07 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //தமிழக மின் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்ய உள்ளார் // அதானி வாங்குறதா இருந்ததாக்கும்
Rate this:
Cancel
kmathivanan - Trichy ,இந்தியா
20-அக்-202118:51:55 IST Report Abuse
kmathivanan அண்ணன்மாலை ஒரு அண்ணாதிமுக இல்லை . இதுவரையில் இரண்டு பெரும் காட்சிகள் மாறி மாறி கொள்ளை அடிப்பது முடிவுக்கு கொண்டுவர Annamalai அவர்கள் மட்டும் தான் முடியும் .
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
20-அக்-202121:48:27 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்சொந்த வீட்டிலேயே சொறிஞ்சிக்க முடியல.. கேடிகள் ஜல்சா கூட்டத்தை சமாளிக்க முடியலே.. இவனுங்க கொள்ளைகூட்டாளி தான் ஆடீம்கான்னு ஒனக்கு தெரிஞ்சே நீ உன் கோயபல்ஸ் கூவலை நிறுத்த மாட்டேங்கிறே...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X