பொது செய்தி

இந்தியா

ஷாரூக் மகனுக்கு ஆதரவாக சிவசேனா அமைச்சர் வழக்கு

Updated : அக் 19, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
மும்பை : 'போதைப் பொருள் தடுப்பு பிரிவு உயரதிகாரி, தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் வகையில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யான் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்' என, மஹாராஷ்டிரா மாநில சிவசேனா அமைச்சர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., கூட்டணி அரசு
ஷாரூக் மகன், சிவசேனா, அமைச்சர், வழக்கு

மும்பை : 'போதைப் பொருள் தடுப்பு பிரிவு உயரதிகாரி, தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் வகையில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யான் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்' என, மஹாராஷ்டிரா மாநில சிவசேனா அமைச்சர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்., மற்றும் காங்., கூட்டணி அரசு அமைந்துள்ளது. தலைநகர் மும்பைக்கு அருகே சொகுசு கப்பலில் போதைப் பொருள் 'பார்ட்டி' நடந்ததாக, போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர்.


latest tamil news



அதில், பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் மகன் ஆர்யான் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆர்யான் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.இந்த சம்பவத்துக்கு உத்தவ் தாக்கரே உட்பட சிவசேனா, தேசியவாத காங்., தலைவர்கள் தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சிவசேனா மூத்த தலைவரும், மஹாராஷ்டிரா மாநில அமைச்சருமான கிஷோர் திவாரி, உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளார்; அதில் கூறப்பட்டுள்ளதாவது:போதைப் பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த ஒரு உயரதிகாரியின் மனைவி, ஹிந்தி சினிமாவில் நடிக்க முயற்சித்து வருகிறார். ஆனால் அவருக்கு சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால், பழிவாங்கும் வகையில் ஷாரூக் கானின் மகன் மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உரிய காரணம் இல்லாமல் தனி மனித சுதந்திரத்தை பறிக்கும் வகையில், ஆர்யான் 17 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.போதைப் பொருள் தடுப்பு பிரிவின் மண்டல இயக்குனர் சமீர் வாங்கடேயின் மனைவி, மராத்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவரைக் குறிப்பிடும் வகையில், மனுவில் இவ்வாறு கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Aarkay - Pondy,இந்தியா
20-அக்-202122:58:07 IST Report Abuse
Aarkay தந்தை கருது எதுவும் சொல்லமாட்டாராம். அவர் சட்டத்தை மதிக்கிறாராம். அவர் கட்டளைப்படி விலைபோன இதுபோன்ற அடிமைகள்தான் அவருக்காக குரல் கொடுக்கும். நல்ல டிராமா இதுபோன்ற கூலிக்கு விலைபோகும், குற்றத்துக்கு துணை போகும் அடிமை பிழைப்பிற்கு வேறு ஏதாவது செய்து பிழைக்கலாம்.
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
20-அக்-202112:18:45 IST Report Abuse
Anand சிவசேனாவாக உருவான இந்த கட்சி பிறகு சோனியா சேனாவாகி பொலிவிழந்து கடேசியில் மூர்க்க சேனாவாக முடிவுறுகிறது....
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-அக்-202111:21:23 IST Report Abuse
முக்கண் மைந்தன் //உயரதிகாரி, தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் வகையில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யான் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்' // Background ல 'கோலி மாரோ' கும்பலு
Rate this:
Aarkay - Pondy,இந்தியா
20-அக்-202122:54:30 IST Report Abuse
Aarkayஹவாலா நாட்டாமை தீர்ப்பு சொல்லிட்டாரு பாலிவுட்டின் சூத்திரதாரி தாவூத் என்பது எல்லோருக்கும் தெரியும். அங்குள்ள அனைவரும் டோப்பு கேஸுங்கதான்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X