சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வங்கி நுழைவாயிலில் மத துவேஷம் : கட்டட உரிமையாளர் மீது போலீசில் புகார்

Updated : அக் 21, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (50)
Share
Advertisement
சென்னை : வங்கி வாடிக்கையாளர்களுக்கு, ஹிந்து மதத்திற்கு எதிரான புத்தகங்கள் வினியோகம் செய்த கட்டட உரிமையாளர், அவரது கூட்டாளி மீது, போலீசில்புகார் அளிக்கப்பட்டு உள்ளது.சென்னை, புரசைவாக்கம், தானா தெருவில், செந்தில்என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில், எஸ்.பி.ஐ., வங்கி செயல்பட்டு வருகிறது. வங்கியின் நுழைவாயிலில் மேஜை அமைத்து, வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹிந்து மதத்திற்கு
வங்கி நுழைவாயில், மத துவேஷம் , கட்டட உரிமையாளர் மீது போலீசில் புகார்

சென்னை : வங்கி வாடிக்கையாளர்களுக்கு, ஹிந்து மதத்திற்கு எதிரான புத்தகங்கள் வினியோகம் செய்த கட்டட உரிமையாளர், அவரது கூட்டாளி மீது, போலீசில்புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னை, புரசைவாக்கம், தானா தெருவில், செந்தில்என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில், எஸ்.பி.ஐ., வங்கி செயல்பட்டு வருகிறது. வங்கியின் நுழைவாயிலில் மேஜை அமைத்து, வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஹிந்து மதத்திற்கு எதிரான புத்தகங்களை செந்தில் வினியோகம் செய்து வந்துள்ளார்.

தகவல் அறிந்து, இந்து முன்னணி எழும்பூர் தொகுதி நிர்வாகிகள், எஸ்.பி.ஐ., வங்கி முன் திரண்டனர். பொதுமக்கள் வந்து செல்கிற, அரசு நடத்தும் வங்கியில், ஹிந்து மதத்திற்கு எதிராகவும், கிறிஸ்துவ மதத்தைப் பரப்பும் வகையிலும், புத்தகங்கள் வழங்கி அட்டூழியம் செய்வதற்கு எதிராக கோஷமிட்டனர்.
இச்செயலில் ஈடுபட்ட செந்தில் மற்றும் அவருக்கு உடந்தையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து, வேப்பேரி போலீசார் சம்பவ இடம் சென்று, மேஜையுடன் புத்தகங்களை அகற்றினர்.

இந்நிலையில், இந்து முன்னணி எழும்பூர் தொகுதி, 104 வது வட்ட தலைவர் கமல், வேப்பேரி காவல் நிலையத்தில் அளித்த புகார்: புரசைவாக்கம் தானா தெருவில், எஸ்.பி.ஐ. வங்கி செயல்படும் கட்டடத்தின் உரிமையாளர் செந்தில், அவரது கூட்டாளி தீபக் ஆகியோர், வங்கியின் நுழைவு வாயிலில், 'இல்லவே இல்லாத இந்து மதம்; ராம ஜென்ம பூமி' உள்ளிட்ட புத்தகங்களை வைத்திருந்தனர்.
ஹிந்து மதத்திற்கு எதிராகவும், இழிவு படுத்தும் விதமாக எழுதப்பட்ட புத்தகங்களையும், கிறிஸ்துவ மதத்திற்கு ஆதரவான புத்தகங்களை, வங்கி வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வினியோகம் செய்து வருகின்றனர். ஹிந்து மதத்தினரை புண்படுத்தும் விதமாக, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அட்டூழியம் செய்து வருகின்றனர். இவர்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
23-அக்-202117:12:46 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy கிடைத்தது வெளிநாட்டு பணம்.
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
23-அக்-202103:29:25 IST Report Abuse
meenakshisundaram ஏதோ சொறி .சிரங்கு .தலைவலி போன்றவற்றுக்கு மருந்து .தைலம் ஒய்ன்ட்மென்ட் என்ற லெவெலுக்கு மதத்தை விளம்பரம் செயது' அதிக காணிக்கை -அதிக பலன் ' என்று பிரசாரம் செயது தாங்கள் வழிபடும் நபரை ஒரு வங்கி தரத்துக்கு தாழ்த்தும் சிலர் உண்மையிலேயே எவ்வளவு தூரத்துக்கு தங்கள் மதத்தை பின் போற்றுவார்கள் என்பது சநதேகமே
Rate this:
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
22-அக்-202111:35:40 IST Report Abuse
Krishnamurthy Venkatesan இங்கு நுங்கம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் நுழைவாயிலில் ஒருவர் பைபிளில் உள்ள வாக்கியங்களை உரத்து சொல்வார் மற்றொருவர் அதையே திருப்பி சொல்வார். அருகில் கருப்பு சட்டையில் ஒருவர் பைக்கில் அமர்ந்திருப்பார். இவர்கள் கிறித்துவ மத சம்பந்தப்பட்ட பிட் நொடிஸ்க்களையும் விநியோகிப்பர். இது 2019 க்கு முன் தினமும் நடக்கும். (நான் தற்போது அங்கு செல்வதில்லை).
Rate this:
Hari - chennai,சவுதி அரேபியா
25-அக்-202116:44:58 IST Report Abuse
Hariஅவங்களும் சாப்பிடணும் இல்லையா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X