தமிழ்நாடு

ஜி.எச்., வளாகத்தில் தனியார் ஆம்புலன்ஸ்: தேவையா? கண்காணிப்பாளர் உத்தரவு, காற்றில்...

Updated : அக் 20, 2021 | Added : அக் 19, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பூர்:அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் உத்தரவை மீறி, தனியார் ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனை வளாகத்துக்குள் நிறுத்தப்படுகிறது.திருப்பூர், தாராபுரம் ரோட்டில், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை என்பதால் எந்த நேரமும் மூன்று, 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருக்கும்.உள்நோயாளியாக இருப்பவர் அல்லது விபத்தில் அடிபட்டு சிகிச்சைக்கு வந்தவர் இறந்து விட்டால் பிரேதத்தை
ஜி.எச்., வளாகத்தில் தனியார் ஆம்புலன்ஸ்:  தேவையா? கண்காணிப்பாளர் உத்தரவு, காற்றில்...

திருப்பூர்:அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் உத்தரவை மீறி, தனியார் ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனை வளாகத்துக்குள் நிறுத்தப்படுகிறது.திருப்பூர், தாராபுரம் ரோட்டில், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை என்பதால் எந்த நேரமும் மூன்று, 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருக்கும்.

உள்நோயாளியாக இருப்பவர் அல்லது விபத்தில் அடிபட்டு சிகிச்சைக்கு வந்தவர் இறந்து விட்டால் பிரேதத்தை வீட்டுக்கு எடுத்து செல்ல இரண்டு அமரர் ஊர்திகளும் நிறுத்தப்பட்டுள்ளது.குழந்தை பிறந்த தாய்மார்களை, மாற்றுத்திறனாளிகளை சிகிச்சை முடிந்த பின் வீடுகளுக்கு அழைத்துச் செல்ல, 104 சிறப்பு ஆம்புலன்ஸ் வாகனம் உள்ளது. அரசு மருத்துவமனையில் இத்தனை வசதிகள் இருந்த போதும், தனியார் ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தப்படுகிறது.
நோயாளியின் உறவினர், உடன்வருவோரை சந்தித்து, குறைந்த கட்டணத்தில் அழைத்து செல்வதாக கூறி செல்லும், சிலர் குறிப்பிட்ட இடத்துக்கு சென்ற பின் பணத்தை கறந்து விடுகின்றனர். அரசே இலவசமாக 108, 104 மற்றும், 155377 இலவச வாகன வசதிகளை அளித்துள்ளதை பலரும் மறுந்த விடுகின்றனர்.அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் வளாகத்துக்குள் தனியார் ஆம்புலன்ஸ் நிறுத்தகூடாது என உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், அத்துமீறி உள்ளே நிறுத்தப்படுகிறது.
போலீசார் கண்டுகொள்வதில்லை.இப்படி செய்யலாமா?
ரயிலில் அடிபட்டு இறப்போரை சில நேரங்கள் அடையாளம் காண முடிவதில்லை. யார் என்பது தெரியாமலே அடக்க செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இது போன்ற அடையாளம் தெரியாத பிரேதங்களை எடுத்து செல்ல வாடகை இல்லாமல் 'பிரீசர் பாக்ஸ்', ஆம்புலன்ஸ் வாகனங்கள் போலீசாருக்கு உதவிகரமாக உள்ளது.அதே போல், கொலை நடக்கும் இடங்களில் போலீசார் தகவல் அளித்ததும், தனியார் ஆம்புலன்ஸ் ஆஜராகி விடுகிறது. இதனை சாதகமாக்கி கொள்ளும், சில டிரைவர்கள், முடிந்தமட்டிலும் 'கறந்து' விடுகின்றனர். இவற்றையும் போலீசார் கண்டுகொள்வதில்லை.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
20-அக்-202110:47:32 IST Report Abuse
duruvasar பொதுவுடமை காப்பாளர்கள் கம்யூனிஸ்ட் மக்கள் பிரதிநிதியாக இருப்பதால் இது சகஜம். மருத்துவமனை வண்டிகள் பழுதாயிருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X