தமிழ்நாடு

ஊத்துக்குளி தாலுகாவுக்கு கருவூலம் தேவை ! கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்

Updated : அக் 20, 2021 | Added : அக் 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பூர்:ஊத்துக்குளி தாலுகா மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்காததால், மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக அதிருப்தி உருவாகியுள்ளது.கடந்த, 2014ம் ஆண்டு அவிநாசி தாலுகாவில் இருந்து பிரித்து, ஊத்துக்குளி தாலுகா தோற்றுவிக்கப்பட்டது. தோற்று விக்கப்பட்டதும். மயானம் இருந்த இடத்தில், தாலுகா அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டது. தாலுகா அலுவலக வளாகத்திலேயே, தாசில்தார்
 ஊத்துக்குளி தாலுகாவுக்கு கருவூலம் தேவை ! கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம்

திருப்பூர்:ஊத்துக்குளி தாலுகா மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்காததால், மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதாக அதிருப்தி உருவாகியுள்ளது.கடந்த, 2014ம் ஆண்டு அவிநாசி தாலுகாவில் இருந்து பிரித்து, ஊத்துக்குளி தாலுகா தோற்றுவிக்கப்பட்டது.
தோற்று விக்கப்பட்டதும். மயானம் இருந்த இடத்தில், தாலுகா அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டது. தாலுகா அலுவலக வளாகத்திலேயே, தாசில்தார் குடியிருப்பும் கட்டப்பட்டுள்ளது.ஆனால், இதுவரை, யாரும் பயன்படுத்தாமல், பாழடைந்து போயுள்ளது. ஊத்துக்குளி தாலுகா கடைசியில் உருவாக்கப்பட்டதாக இருந்தாலும், மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக, விவசாயிகள் புகார் கூறுகின்றனர்.
திருப்பூர் நகரில் இருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ள ஊத்துக்குளி தாலுகா அலுவலகம் இருந்தும், தனித்தீவு போல தனித்து விடப்பட்டுள்ளது. எட்டு ஆண்டுகளான நிலையில், இதுநாள் வரை கருவூல வசதி இல்லை.இதனால், திருப்பூர் வடக்கு சார்நிலை கருவூலத்தின் மூலம், கருவூல பணி மேற்கொள்ளப்படுகிறது.
விவசாயிகள், பொதுமக்கள், நில ஆவணங்கள் தொடர்பாக, விண்ணப்ப கட்டணம் செலுத்த, திருப்பூர் வடக்கு தாலுகாவையும், 'திருப்பூர் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா'வையும் நம்பியுள்ளனர்.அலைக்கழிப்பு...அரசு சம்பந்தப்பட்ட வேலை எனில், ஊத்துக்குளி தாலுகாவை சேர்ந்த மக்கள், திருப்பூர் வடக்கு தாலுகாவுக்கு சென்று, 'சலான்' வாங்கி சீல் வைத்து, பிறகு, அருகே உள்ள 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' வங்கிக்கு சென்று, விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி, அதன் ரசீதை பெற்றுச்சென்று, ஊத்துக்குளி தாலுகாவில் கொடுக்க வேண்டும்.
இப்படி, சாதாரண 'சலான்' மூலம் பணம் செலுத்தும் ஒரு விஷயத்துக்கே ஊத்துக்குளி மக்கள் இப்படி அலைக்கழிக்கப்படுகின்றனர். இன்று, நேற்றல்ல, தாலுகா உருவாகிய நாளில் இருந்தே இதே நிலை தொடர்கிறது.இனியாவது, மாவட்ட நிர்வாகம் ஊத்துக்குளி மக்களின் கோரிக்கையை கேட்டு, கருணை காட்ட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
20-அக்-202110:44:35 IST Report Abuse
duruvasar பின்ன என்னங்க சுடுகாட்டில் யாராவது பணம் கட்ட போவாங்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X