அரசியல் செய்தி

தமிழ்நாடு

எம்.ஆர்., விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் மீண்டும் 'சம்மன்'

Updated : அக் 21, 2021 | Added : அக் 20, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை :'உள்ளாட்சி தேர்தல் பணியால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை' என, கடிதம் வாயிலாக கால அவகாசம் கோரிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வரும் 25ம் தேதி ஆஜராக, லஞ்ச ஒழிப்பு போலீசார் மீண்டும் 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர், அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். சாலைகளில் பதிக்கப்படும்
'மாஜி' மந்திரிக்கு மீண்டும் 'சம்மன்'

சென்னை :'உள்ளாட்சி தேர்தல் பணியால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை' என, கடிதம் வாயிலாக கால அவகாசம் கோரிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வரும் 25ம் தேதி ஆஜராக, லஞ்ச ஒழிப்பு போலீசார் மீண்டும் 'சம்மன்' அனுப்பி உள்ளனர்.கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர், அ.தி.மு.க., ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.

சாலைகளில் பதிக்கப்படும் ஒளிரும் விளக்குகள், வாகனங்களுக்கு ஜி.பி.எஸ்., கருவிகள் கொள்முதல் செய்ததில், பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார்கள் தரப்பட்டன.இது குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக, 8.62 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்தது தெரிய வந்தது. அவர் மீது, கரூரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பின், ஜூலை 22ல், சென்னை மற்றும் கரூரில், விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் வீடு, அலுவலகம், குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நிறுவனங்கள் என, 26 இடங்களில் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது, 25.26 லட்சம் ரூபாய் ரொக்கம், காப்பீட்டு முதலீடுகள், பணப் பரிவர்த்தனைக்கான ஆவணங்களை கைப்பற்றினர். சொத்து குவிப்பு தொடர்பாக, செப்., 30ல் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என, எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பினர்.
ஆனால் அவர், 'உள்ளாட்சி தேர்தல் பணிகள் காரணமாக, விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை; தேர்தல் முடியும் வரை அவகாசம் வேண்டும்' என, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு கடிதம் வாயிலாக கோரிக்கை விடுத்தார்.
தற்போது உள்ளாட்சி தேர்தல் முடிந்துள்ளதால், வரும் 25ம் தேதி, சென்னை ஆலந்துாரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை தலைமை அலுவலகத்திற்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என, அவருக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - சென்னை,இந்தியா
22-அக்-202112:14:56 IST Report Abuse
sankar நல்ல போட்டோக்களை சரியான நேரத்தில் போடும் தினமலருக்கு பாராட்டு. திருட்டு முகலட்சணம் தான்.
Rate this:
Cancel
Surendran - singapore,சிங்கப்பூர்
20-அக்-202114:46:29 IST Report Abuse
Surendran இவனையெல்லாம் இன்னும் உள்ளே பிடிச்சு போடாம இருப்பதே தப்பு. கொள்ளைக்கூட்டத்தில் ஒரு அடிமை கூட வெளியில் இருக்கக்கூடாது. தமிழகத்தை ஒட்டுமொத்தமா சூறையாடிவிட்டு போயிருக்கான் அடிமைக்கூட்டம்.
Rate this:
Cancel
Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா
20-அக்-202107:04:15 IST Report Abuse
Ravichandran Narayanaswamy அதெப்படி லஞ்சஒழிப்பு துறை எல்லா அதிகாரிகளும் கொத்தடிமைகளாக வேலை பார்க்கிறார்களா-எப்படி அதிமுக அமைச்சர்கள் மட்டும் லஞ்சத்தில் சிக்குகிறார்கள். எல்லா திமுக சட்டமன்ற பாரளுமன்ற உறுப்பினர்களும் கவுன்சிலர் வட்டம் மாவட்டம் எல்லாம் உத்தமர்களா-அப்போ அவர்களிடம் எப்படி ஐம்பது கோடி முதல் ஐயாறியிரம் கோடி சொத்துக்கள் உள்ளன. பொய் சொல்லுவதில் வல்லவர்களாச்சே-கருணாநிதிக்கு காரே இல்லையாமே. எல்லோரும் காதில் பூ வைப்பார்கள்-திமுக காதில் பூந்தோட்டத்தையே வைப்பார்கள். நடந்துமுடிந்த தேர்தலில் நிச்சயம் ஊழல் நடந்திருக்கும். பேப்பர் வோட்டில் அவர்கள் தாங்களே தங்களுக்கு வோட்டு போட்டுக்கொள்வார்கள். அதற்கு அல்லக்கை அரசு அதிகாரிகள் மானம்கெட்டு சொரணைக்கெட்டு உதவுவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X