சசிகலா ஊடுருவல் தடுக்க வியூகம் : அ.தி.மு.க.,வினருக்கு பொற்கிழி| Dinamalar

தமிழ்நாடு

சசிகலா ஊடுருவல் தடுக்க வியூகம் : அ.தி.மு.க.,வினருக்கு 'பொற்கிழி'

Added : அக் 20, 2021 | கருத்துகள் (21)
Share
அ.தி.மு.க.,வில் சசிகலா ஊடுருவல் மற்றும் தொண்டர்களிடம் குழப்பம் ஏற்படுத்துவதை தவிர்க்கும் வகையில், எதிர்க்கட்சி தலைவராக உள்ள பழனிசாமி, தீபாவளி பண்டிகை முடிந்ததும், தொண்டர்களை சந்திக்க புது வியூகம் அமைத்துள்ளார்.கட்சி துவக்கம்கடந்த 1972ல் அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., துவக்கியபோது உறுப்பினராக இருந்து, தற்போது வரை வேறு கட்சியில் சேராமல் உள்ள மூத்த உறுப்பினர்கள் பற்றிய
சசிகலா ஊடுருவல் , வியூகம் அ.தி.மு.க.,பொற்கிழி

அ.தி.மு.க.,வில் சசிகலா ஊடுருவல் மற்றும் தொண்டர்களிடம் குழப்பம் ஏற்படுத்துவதை தவிர்க்கும் வகையில், எதிர்க்கட்சி தலைவராக உள்ள பழனிசாமி, தீபாவளி பண்டிகை முடிந்ததும், தொண்டர்களை சந்திக்க புது வியூகம் அமைத்துள்ளார்.


கட்சி துவக்கம்



கடந்த 1972ல் அ.தி.மு.க.,வை எம்.ஜி.ஆர்., துவக்கியபோது உறுப்பினராக இருந்து, தற்போது வரை வேறு கட்சியில் சேராமல் உள்ள மூத்த உறுப்பினர்கள் பற்றிய விபரங்கள், ஒவ்வொரு தொகுதி வாரியாக தயார் செய்யப்படுகின்றன.தவிர, எம்.ஜி.ஆர்., கட்சி துவக்குவதற்கு முன், எம்.ஜி.ஆர்., மன்றத்தில் இருந்த மூத்த உறுப்பினர்கள், கட்சி துவக்கம் முதல் தற்போது வரை உள்ள உறுப்பினர்களை கண்டறியும் பணிகளில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள்ஈடுபட்டுள்ளனர்.


latest tamil news



சுற்றுப்பயணம்



அடுத்த மாதம் முதல், தொகுதிவாரியாக சுற்றுப்பயணம் செய்ய உள்ள எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, எம்.ஜி.ஆர்., கால மூத்த உறுப்பினர்களுக்கு, 'பொற்கிழி' வழங்கி கவுரவித்தல் உள்ளிட்ட சிறப்புகளை செய்ய உள்ளார்.இந்நிகழ்ச்சி, சேலம் மாவட்டத்தில், கெங்கவல்லி தொகுதியில் இருந்து துவங்க உள்ளது. இதில், தொகுதிக்கு 100 முதல் 200 பேருக்கு மேல், 'பொற்கிழி' வழங்க உள்ளார். அனைத்து தொகுதிகளிலும் இதே நிகழ்ச்சியை நடத்தி, தொண்டர்களைசந்திக்க திட்டம் வகுத்துள்ளார்.


'பொற்கிழி'யில் என்ன இருக்கும்?



அ.தி.மு.க., சார்பில் வழங்க உள்ள, 'பொற்கிழி'யில் தங்கக் காசு, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவம் பதித்த பொன் விழா நினைவு நாணயம், பதக்கம், வழங்கப்படுபவரின் பெயர் விபரத்துடன் கூடிய சான்றிதழ் உள்ளிட்டவை இருக்கும்.மேலும், 'விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் தென்னங்கன்று உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கப்படும்' என, கட்சியின் மூத்தநிர்வாகி ஒருவர் தெரிவித்தார். - நமது நிருபர் -

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X