இது உங்கள் இடம்: தி.மு.க., ஆட்சியில் இருக்கும் வரை...

Added : அக் 20, 2021 | கருத்துகள் (75) | |
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் க.சுந்தர், களக்காடு, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காஞ்சிபுரத்தில், 'ஆண்டர்சன்' என்ற பெயரில் இயங்கும் கிறிஸ்துவ பள்ளியில், ருத்ராட்சம் அணிந்து வந்த கிருபாகரன், கிருபாநந்தன் ஆகிய இரு மாணவர்களையும், ஆசிரியர் ஜாய்சன் பிரம்பால் வெளுத்து வாங்கியுள்ளார். மேலும்
DMK, MK Stalin, Hindu


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம்


க.சுந்தர், களக்காடு, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: காஞ்சிபுரத்தில், 'ஆண்டர்சன்' என்ற பெயரில் இயங்கும் கிறிஸ்துவ பள்ளியில், ருத்ராட்சம் அணிந்து வந்த கிருபாகரன், கிருபாநந்தன் ஆகிய இரு மாணவர்களையும், ஆசிரியர் ஜாய்சன் பிரம்பால் வெளுத்து வாங்கியுள்ளார். மேலும் அவர்கள் தலையில், மற்ற மாணவர்களையும் குட்டச் சொல்லி குதுாகலித்திருக்கிறார்.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில், ஹிந்து, கிறிஸ்துவம், முஸ்லிம் என்று மூன்று மதங்களைச் சேர்ந்த பள்ளிகள் உள்ளன. அந்த பள்ளிகளில், அனைத்து மத மாணவர்களும் படித்து வருகின்றனர். நாங்கள் படித்த காலத்தில், அந்த பள்ளிகளில் மாணவர்கள் அவரவர் மத சின்னங்களை அணிந்து வந்து பாடம் கற்றனர். அதை ஆசிரியர்கள் தடை செய்ததும் இல்லை; அதற்காக தண்டித்ததும் இல்லை.

ஆனால் படிப்பு விஷயத்தில், ஆசிரியர்கள் கறாராக நடந்தனர். சரியாக படிக்காத மாணவர்களை நையப்புடைத்தனர். மாணவர்களை அடிப்பதற்காகவே, பிரம்புகள் தயார் செய்யப்பட்டிருக்கும். கன்னத்தில் அறை விழுந்தால், 10 நிமிடங்களுக்கு காதில், 'ஙொய்' என்று ரீங்கரிக்கும் அனுபவங்களை எல்லாம் அடைந்து இருக்கிறோம்.

ஆனால், தற்போது எந்த மாணவனையும், எந்த காரணத்திற்காகவும் ஆசிரியர் அடிக்கக் கூடாது என்ற அரசாணை உள்ளது. அப்படியிருக்கும் போது, ஆண்டர்சன் பள்ளியில் கணக்கு பாடம் எடுக்கும் ஜாய்சன் என்ற கிறிஸ்துவ ஆசிரியர், அந்த இரு மாணவர்களையும் அடித்தது, இந்திய குற்றவியல் சட்டப்படி சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும். சட்டதை காப்பாற்றும் நீதிமன்றம், அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமா?


latest tamil newsமேற்படி ஆசிரியர் ஜாய்சன், கணக்கு பாடம் எடுப்பதற்காக அப்பள்ளியில் நியமிக்கப்பட்டாரா அல்லது மாணவர்களை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றும் பணியில் ஈடுபடுவதற்காக நியமிக்கப்பட்டரா? கிறிஸ்துவ மதத்தினர் நடத்தும் பள்ளிகளில், மாணவியர் பூ, பொட்டு வைத்து வரக் கூடாது உட்பட பலவிதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இது அனைவருக்கும் தெரியும்.

முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல, ஆண்டர்சன் பள்ளி நிர்வாகம், 'இப்படிப்பட்ட குற்றச்சாட்டு இதுவரை எழுந்ததில்லை' என கூறுகிறது.அதை உண்மை என நம்பினாலும், இதுவரை எழாத குற்றச்சாட்டு இப்போது ஏன் எழுந்து இருக்கிறது? காரணம், கிறிஸ்துவர் போட்ட பிச்சையால் தான், தி.மு.க., ஆட்சியில் அமர்ந்துள்ளது என்பதால் தான்.தி.மு.க., ஆட்சியில் இருக்கும் வரை, ஹிந்துக்களை மத மாற்றுவதற்கான எல்லா அட்டூழியங்களும் அரங்கேறும்.

Advertisement
வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Gnanam - Nagercoil,இந்தியா
20-அக்-202121:42:08 IST Report Abuse
Gnanam இறக்குமதி செய்த அந்நியநாட்டு மாதங்கள் யாவும் காலப்போக்கில் காலாவதியாகிவிடும். இந்தியமண்ணின் சொந்த கலாச்சாரங்கள்தான் நீடித்து தலைநிமிர்ந்து வாழும். உலகமே புகழ்ந்துபாடும்படி இந்திய கலாச்சாரங்கள் வேகமாக திரும்பி வருகின்றன. நம்பிக்கையும் பொறுமையும் தேவை.
Rate this:
Cancel
T.sthivinayagam - agartala,இந்தியா
20-அக்-202118:50:19 IST Report Abuse
T.sthivinayagam அவரவர் மத சின்னங்களை அறிய சொல்லும் நீங்கள், அவரவர் தாய் மொழியில் கடவுளை வணங்குவதை எதிர்ப்பது ஏன்?. மகளிர் பொட்டு பூ வைப்பதை சொல்லும் நீங்கள் ஏன் மகளிர் அர்ச்சகர்கள் ஆவதை தடுப்பது ஏன். -சுய நலனுக்காக பொது நலன் பேசுவது வியப்பாக உள்ளது-
Rate this:
Cancel
S.kausalya - Chennai,இந்தியா
20-அக்-202118:47:35 IST Report Abuse
S.kausalya இந்துக்களின் ஓட்டு, வரி மாத்திரம் இல்லை இந்துக்களால் கோயிலுக்கு செலுத்தப்படும் காணிக்கை, கோயிலின் சொத்துக்கள் எல்லாமும் வேண்டும்.ஆனால் இந்து மக்கள் மட்டும் தான் தேவை இல்லை. கோயிலில் காணிக்கை குறைந்து வருவதால் தானே கோயிலை திறக்க அனுமதித்து உள்ளனர் நம் மக்கள் இந்த அனுமதியை மகிழ்வுடன் வரவேற்பதாக சொல்கிறார்கள். கிறுக்கு பிடித்த மக்கள். சாமியை மட்டும் கும்பிட்டு விட்டு வாருங்கள். மறந்தும் உண்டியலில் காசு poda.வேண்டாம். எப்படியும் கோயில் சொத்து போனது போனது தான் அதை இந்த aatchiyaalargalidamirundhu நம்மால் திரும்ப வாங்க முடியாது. ஆனால் உண்டியல் காணிக்கை போடாமல் இருக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X