மதுரை : ''பயங்கரவாத சக்திகளுக்கு தி.மு.க., அரசு பயப்படலாம்; பா.ஜ., ஒரு போதும் பயப்படாது,'' என பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலர் இப்ராஹிம் கூறினார்.

மிலாடி நபியை முன்னிட்டு, மதுரையில் கோரிப்பாளையம் தர்காவிற்கு செல்ல முயன்று, கைதான இப்ராஹிம் கூறியதாவது: தொடர்ந்து மத நம்பிக்கையை சீர்குலைக்கும் தி.மு.க., அரசு, முஸ்லிம்களை பா.ஜ.,விற்கு எதிரான வன்முறைக்கு துாண்டிவிட திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
பா.ஜ.,வில் முஸ்லிம்கள் இணையும் நிலையில் பள்ளிவாசலுக்கும், தர்காவிற்கும் அனுமதிக்க மாட்டோம் என எஸ்.டி.பி.ஐ., - பி.எப்.ஐ., - த.மு.மு.க., போன்ற இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகள், போலீசாருக்கு வெளிப்படையாக மிரட்டல் விடுகின்றன.மிலாடி நபியை முன்னிட்டு, கோரிப்பாளையம் தர்காவிற்கு முஸ்லிம்களுடன் செல்ல முயன்ற எங்களை, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக் கூறி கைது செய்தனர்.

இது, ஜனநாயக மாண்புக்கு எதிரானது.இதுபோன்ற கைதுக்கு பயப்பட மாட்டோம். பயங்கரவாத சக்திகளுக்கு தி.மு.க., அரசு பயப்படலாம்; பா.ஜ., ஒரு போதும் பயப்படாது. பா.ஜ.,வில் உள்ள முஸ்லிம்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டால், அதை போராடி மீட்போம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE