பயங்கரவாத சக்திகளுக்கு பா.ஜ., பயப்படாது: இப்ராஹிம் ஆவேசம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பயங்கரவாத சக்திகளுக்கு பா.ஜ., பயப்படாது: இப்ராஹிம் ஆவேசம்

Updated : அக் 20, 2021 | Added : அக் 20, 2021 | கருத்துகள் (28)
Share
மதுரை : ''பயங்கரவாத சக்திகளுக்கு தி.மு.க., அரசு பயப்படலாம்; பா.ஜ., ஒரு போதும் பயப்படாது,'' என பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலர் இப்ராஹிம் கூறினார்.மிலாடி நபியை முன்னிட்டு, மதுரையில் கோரிப்பாளையம் தர்காவிற்கு செல்ல முயன்று, கைதான இப்ராஹிம் கூறியதாவது: தொடர்ந்து மத நம்பிக்கையை சீர்குலைக்கும் தி.மு.க., அரசு, முஸ்லிம்களை பா.ஜ.,விற்கு எதிரான வன்முறைக்கு

மதுரை : ''பயங்கரவாத சக்திகளுக்கு தி.மு.க., அரசு பயப்படலாம்; பா.ஜ., ஒரு போதும் பயப்படாது,'' என பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலர் இப்ராஹிம் கூறினார்.



latest tamil news



மிலாடி நபியை முன்னிட்டு, மதுரையில் கோரிப்பாளையம் தர்காவிற்கு செல்ல முயன்று, கைதான இப்ராஹிம் கூறியதாவது: தொடர்ந்து மத நம்பிக்கையை சீர்குலைக்கும் தி.மு.க., அரசு, முஸ்லிம்களை பா.ஜ.,விற்கு எதிரான வன்முறைக்கு துாண்டிவிட திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

பா.ஜ.,வில் முஸ்லிம்கள் இணையும் நிலையில் பள்ளிவாசலுக்கும், தர்காவிற்கும் அனுமதிக்க மாட்டோம் என எஸ்.டி.பி.ஐ., - பி.எப்.ஐ., - த.மு.மு.க., போன்ற இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகள், போலீசாருக்கு வெளிப்படையாக மிரட்டல் விடுகின்றன.மிலாடி நபியை முன்னிட்டு, கோரிப்பாளையம் தர்காவிற்கு முஸ்லிம்களுடன் செல்ல முயன்ற எங்களை, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக் கூறி கைது செய்தனர்.


latest tamil news



இது, ஜனநாயக மாண்புக்கு எதிரானது.இதுபோன்ற கைதுக்கு பயப்பட மாட்டோம். பயங்கரவாத சக்திகளுக்கு தி.மு.க., அரசு பயப்படலாம்; பா.ஜ., ஒரு போதும் பயப்படாது. பா.ஜ.,வில் உள்ள முஸ்லிம்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டால், அதை போராடி மீட்போம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X