பொது செய்தி

தமிழ்நாடு

கேபிள் டிவி கட்டணம் டிசம்பர் 1 முதல் உயர்வு?

Updated : அக் 20, 2021 | Added : அக் 20, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
சென்னை : சேனல் நிறுவனங்கள் பிரதான சேனல்களை, தொகுப்பிலிருந்து வெளியேற்றுவதால், டிச., 1 முதல் கேபிள், 'டிவி' கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக, கேபிள் ஆப்பரேட்டர்கள் தெரிவித்துள்ளனர்.விரும்பிய சேனல்களுக்கு மாறும் முறை, 2019 பிப்.,யில் அறிமுகமானது. புதிய முறையில், வாடிக்கையாளர்களே தாங்கள் விரும்பும் சேனல்களை, தேர்வு செய்து கொள்ளலாம். இதில், சேனல் நிறுவனங்கள், தங்களின்
Cable TV, கேபிள் டிவி, கட்டணம்

சென்னை : சேனல் நிறுவனங்கள் பிரதான சேனல்களை, தொகுப்பிலிருந்து வெளியேற்றுவதால், டிச., 1 முதல் கேபிள், 'டிவி' கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக, கேபிள் ஆப்பரேட்டர்கள் தெரிவித்துள்ளனர்.

விரும்பிய சேனல்களுக்கு மாறும் முறை, 2019 பிப்.,யில் அறிமுகமானது. புதிய முறையில், வாடிக்கையாளர்களே தாங்கள் விரும்பும் சேனல்களை, தேர்வு செய்து கொள்ளலாம். இதில், சேனல் நிறுவனங்கள், தங்களின் சேனல்களுக்கான அதிகபட்ச கட்டணத்தை, 19 ரூபாய் வரை நிர்ணயித்து கொள்ள முடியும்.

இந்நிலையில், திருத்தியமைக்கப்பட்ட கட்டணம், ஜனவரியில் வெளியிடப்பட்டது. இதில், ஒரு சேனலின் அதிகபட்ச கட்டணம், 19 ரூபாயிலிருந்து, 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் மேலும் அதிகமான மற்றும் விரும்பிய சேனல்களை பார்க்க முடியும் என கூறப்படுகிறது.


latest tamil news



இந்த திருத்தப்பட்ட கட்டணத்திற்கு, சேனல் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதனால், குறிப்பிட்ட சேனல்கள் அடங்கிய தொகுப்பிற்கு, தனி கட்டணம் விதிக்க திட்டமிட்டுள்ளன. உதாரணமாக, 'டிஸ்னி ஹாட் ஸ்டாரில்' தொகுப்பு சேனல்கள்களின் கட்டணம், 49 ரூபாயாக உள்ளது. இது, 69 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது.

இதேபோல, ஒவ்வொரு நிறுவனங்களும் தொகுப்பு சேனல்களின் கட்டணத்தை உயர்த்த உள்ளன. இல்லையெனில், பிரதான சேனல்களை தொகுப்பில் இருந்து மாற்ற உள்ளனர். அவ்வாறு மாற்றும்போது, அதற்கான கட்டணம் மாறும். இதனால், மாதக் கேபிள் கட்டணம், 30 முதல் 40 சதவீதம் வரை உயரும் என கேபிள் ஆப்பரேட்டர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது, அரசு கேபிள் மாதக் கட்டணமாக, 130 ரூபாய் உடன் ஜி.எஸ்.டி., என, 154 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raja - Cotonou,பெனின்
20-அக்-202112:48:03 IST Report Abuse
raja பத்துவருஷமா காஞ்ச விடியல் கோஷ்டிகள் அப்புறம் இப்போதான் கொள்ளை அடிக்க முடியும்...இப்படி செஞ்சாத்தான்... சூப்பர் விடியலு டாஸ்மாக் டுமீல்னுவொளுக்கு......
Rate this:
Cancel
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
20-அக்-202112:41:07 IST Report Abuse
Paraman ₹700.லேயே 300.க்கும் மேற்பட்ட சானெல்கள், அதிவேக (100.Mps.) இன்டர்நெட், மற்றும் ஒரு லேண்ட்லைன் போன் நம்பர்(இந்தியாவெங்கும் எந்த நம்பருக்கும் அன்லிமிடெட் அழைப்புகள் மேற்கொள்ளலாம்) என்ற அனைத்தையும் ஜியோ பைபர் தருகிறர்கள். கேட்டால் அம்பானி, அதானி என்று கூவிவிட்டு அதை தான் வைத்து இருக்கிறார்கள் ஜியோ இருக்கும்போது சன் கேபிள் நெட்ஒர்க் போன்ற திருட்டு கம்பனிகளுக்கு ஏன் உங்கள் பணத்தை கொட்டி வீணடிக்கிறீர்கள்
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
20-அக்-202111:12:16 IST Report Abuse
VENKATASUBRAMANIAN TRAI is useless. No control over broadcasters or operators.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X