ரூ.50 கோடி இழப்பீடு தர வேண்டும்: நடிகை ஷில்பா ஷெட்டி நோட்டீஸ்

Updated : அக் 20, 2021 | Added : அக் 20, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
மும்பை : தங்களைப் பற்றி பொய் புகார் தெரிவித்த நடிகை ஷெர்லின் சோப்ரா, 50 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவரும் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளனர்.மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா. தொழிலதிபரான இவர் பெண்களை ஆபாச 'வீடியோ' எடுத்து தனி இணையதளம் துவக்கி பதிவிட்டதாக புகார் எழுந்தது.
Shilpa Shetty, Defamation Case, Sherlyn Chopra

மும்பை : தங்களைப் பற்றி பொய் புகார் தெரிவித்த நடிகை ஷெர்லின் சோப்ரா, 50 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியும், அவரது கணவரும் 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளனர்.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா. தொழிலதிபரான இவர் பெண்களை ஆபாச 'வீடியோ' எடுத்து தனி இணையதளம் துவக்கி பதிவிட்டதாக புகார் எழுந்தது. போலீசாரால் கைது செய்யப்பட்ட அவர் சமீபத்தில் 'ஜாமின்' பெற்றார்.


latest tamil news


இதற்கிடையே மும்பையில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் மீது, மற்றொரு நடிகையான ஷெர்லின் சோப்ரா ஒரு புகார் அளித்தார். அதில் தம்பதியினர் மீது மோசடி, மிரட்டல், துன்புறுத்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்களை கூறி இருந்தார். இதுதொடர்பாக ஷெர்லின் சோப்ராவுக்கு ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் தரப்பில் வக்கீல் 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது: விளம்பரம் தேடும் நோக்கில் ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு உள்ளது. அவதுாறு ஏற்படுத்துதல் மற்றும் பணம் பறித்தல் இதன் நோக்கமாக உள்ளது. வழக்கில் எந்த தொடர்பும் இல்லாத ஷில்பா ஷெட்டி மீது பொய்யான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு உள்ளன. எனவே பத்திரிகைகள் மற்றும் 'டிஜிட்டல் மீடியா' வாயிலாக ஏழு நாட்களுக்குள் பொது மன்னிப்பு கோருவதுடன், 50 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
20-அக்-202112:52:32 IST Report Abuse
Ramesh Sargam இவர்களுக்கு இதெல்லாம் ஒரு பொழுதுபோக்கு. நாம் ஏன் இதுபோன்ற செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
20-அக்-202109:51:56 IST Report Abuse
elakkumanan அதுதானே ஞாயம்..............ஏதோ இந்தியாவின் பிரதம மந்திரி அல்லது உள்துறை மந்திரி யாக இருந்தால், யாரு வேணும்னாலும் ஏன்னா வேணும்னாலும் எங்க ஊரில் சொல்லலாம்..........அவங்க வீரமா சொந்த பெயரை மறைத்து நேர்மையா வாழ்க்கை நடத்தும் கடை குடி இனமாகவோ அல்லது வேறு ஏதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்......யாரை வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்...யாரும் கேட்க மாட்டாங்க..அது சனநாயகம்....உரிமை.... ஆனால், மாநில முதல்வர் மற்றும் சிறுபான்மை இனம் என்றால் அதற்க்கு சிறப்பு உரிமை உண்டு என்பதால் கவனம் தேவை...............சட்டத்தை மதிப்போம்...பிரதம மந்திரி யை வீரமாக பெயரை சொல்லாமல் வாய்க்கு வந்தபடி எழுதி சட்டத்தின் வாய்ப்புகளை பயன்படுத்துவோம்...நடிகைகளையும் விமர்சிக்காதீர்...வழக்கு வரும்....ஒன்லி பிரதம மந்திரி....... வாய்க டுமீல்....சொறி மண்ணு....
Rate this:
Cancel
Barakat Ali - Medan,இந்தோனேசியா
20-அக்-202108:14:20 IST Report Abuse
Barakat Ali சோப்ராவின் வக்கீல் பார்த்துக்குவாரு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X