பொது செய்தி

தமிழ்நாடு

இறக்குமதி செய்த மலேஷியா மணல்; 2022 ஜூன் வரை விற்க அரசு அனுமதி

Updated : அக் 20, 2021 | Added : அக் 20, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
சென்னை : மலேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை, அடுத்தாண்டு ஜூன் 20 வரை விற்பனை செய்ய, அரசு அனுமதி வழங்கியுள்ளது.சென்னை, எண்ணுார், காட்டுப்பள்ளி, துாத்துக்குடி துறைமுகங்களில் மாதந்தோறும், 5 லட்சம் டன் மலேஷியா மணலை இறக்குமதி செய்யும் வகையில், தனியார் நிறுவனத்திற்கு அ.தி.மு.க., ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டது.ஆனால், மலேஷியா மணலை விற்பனை செய்ய நீர்வளத்துறை ஆர்வம்
மலேஷியா மணல், அரசு, அனுமதி

சென்னை : மலேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை, அடுத்தாண்டு ஜூன் 20 வரை விற்பனை செய்ய, அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை, எண்ணுார், காட்டுப்பள்ளி, துாத்துக்குடி துறைமுகங்களில் மாதந்தோறும், 5 லட்சம் டன் மலேஷியா மணலை இறக்குமதி செய்யும் வகையில், தனியார் நிறுவனத்திற்கு அ.தி.மு.க., ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டது.ஆனால், மலேஷியா மணலை விற்பனை செய்ய நீர்வளத்துறை ஆர்வம் காட்டவில்லை. முக்கிய புள்ளிகள் பலரும், எம் - சாண்ட் குவாரிகளை திறந்ததால், அவற்றை விற்பனை செய்ய ஊக்கம் அளிக்கப்பட்டது.


latest tamil news


எனவே, ஒப்பந்தம் வழங்கப்பட்ட மூன்று ஆண்டுகளில், 5.24 லட்சம் டன் மலேஷியா மணல் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கை காரணம் காட்டி, இறக்குமதி மணல் விற்பனை நிறுத்தப்பட்டது. இதனால், 18 ஆயிரத்து 616 டன் மணல் தேக்கம் அடைந்துள்ளது. தேங்கியுள்ள மணலை விற்பனை செய்ய, ஏற்கனவே இரண்டு முறை கால அவகாசம் வழங்கப்பட்டது. கூடுதல் கால அவகாசம் வழங்க வேண்டும் என, ஒப்பந்த நிறுவனம் தரப்பில் அரசிடம் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, மீதமுள்ள மணலை அடுத்தாண்டு ஜூன் 20 வரை விற்பனை செய்ய, அந்நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான உத்தரவை பொதுப்பணித் துறை செயலர் சந்தீப் சக்சேனா பிறப்பித்துள்ளார். இடைப்பட்ட காலத்தில், மணல் இறக்குமதி செய்யக் கூடாது என, ஒப்பந்த நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-அக்-202119:41:32 IST Report Abuse
ஆரூர் ரங் அர்ஜெண்ட. 11. 05 ஆன உடனே செந்தில் பாலாஜி வண்டியுடன் வருவாரு 😋. அவசரம்
Rate this:
Cancel
Surendran - singapore,சிங்கப்பூர்
20-அக்-202111:15:24 IST Report Abuse
Surendran இறக்குமதி மணலை விற்க தடை செய்துவிட்டு தமிழக ஆற்று மணல் கொள்ளையை நடத்தி பல ஆயிரம் கோடி கொள்ளையடித்த அடிமைக்கூட்டம்.. அதற்க்கு துணை நின்ற பாஜக...
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
20-அக்-202110:16:18 IST Report Abuse
sahayadhas இந்தியாவில் விஞ்ஞானமும் இல்லை, ஒரு மண்ணும் இல்லை. G ST மட்டும் செழிப்பாக உள்ளது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X