புதுச்சேரி : தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடைகளை திறந்து இலவச அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வழங்க வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் சிவா கேட்டுக்கொண்டுள்ளார்.
அவரது அறிக்கை:உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.,வின் அடிப்படை கொள்கையான இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டதை அடுத்து தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் , வேட்பு மனு தாக்கலை நிறுத்தி வைத்து, விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளது. ஆனாலும் தேர்தல் நன்னடத்தை விதிகளை வாபஸ் பெற மாநிலத் தேர்தல் ஆணையம் மறுத்து வருகிறது. இதை வாய்ப்பாக பயன்படுத்தி, ஆளும் என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி அரசு சட்டசபையில் அறிவித்த அறிவிப்புகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது
அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அரசு உடனடியாக தீபாவளி போனசை வழங்க வேண்டும்.அரசு நிறுவன தொழிலாளர்களுக்கு நிலுவையில் உள்ளதில் 5 மாத சம்பளம், தற்காலிக ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என சட்டசபையில் அறிவித்ததை அமல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை கால தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கடைகளை திறந்து இலவச அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE