தேர்தல் முறைகேடு, சட்டம்-ஒழுங்கு பிரச்னை குறித்து கவர்னரிடம் இன்று அதிமுக புகார்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் முறைகேடு, சட்டம்-ஒழுங்கு பிரச்னை குறித்து கவர்னரிடம் இன்று அதிமுக புகார்

Added : அக் 20, 2021 | கருத்துகள் (18)
Share
சென்னை : தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, உள்ளாட்சி தேர்தல் முறைகேடு உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து, இன்று(அக்.,20) கவர்னரை சந்தித்து புகார் அளிக்க உள்ளார்.தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் இம்மாதம் நடந்தது. தேர்தலில், ஆளும்
ADMK, Governor, EPS, Ravi, ஆளுநர்,கவர்னர்

சென்னை : தமிழக எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, உள்ளாட்சி தேர்தல் முறைகேடு உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து, இன்று(அக்.,20) கவர்னரை சந்தித்து புகார் அளிக்க உள்ளார்.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சி தேர்தல் இம்மாதம் நடந்தது. தேர்தலில், ஆளும் கட்சியான தி.மு.க., அமோக வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியான அ.தி.மு.க., பெரும் தோல்வியை சந்தித்தது. மாநில தேர்தல் ஆணையம் உதவியுடன், ஆளும்கட்சி முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக, அ.தி.மு.க., குற்றம் சாட்டியது.


latest tamil news



இந்நிலையில், அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி, இன்று காலை 11:00 மணிக்கு, கவர்னர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளார். அப்போது, உள்ளாட்சி தேர்தல் முறைகேடு, சட்டம் - ஒழுங்கு பிரச்னை போன்றவை தொடர்பாக, ஆதாரங்களுடன் புகார் அளிக்க உள்ளார். அவருடன் அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் செல்ல உள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X