பொது செய்தி

இந்தியா

பயங்கரவாதிகளின் கூடாரம் வங்கதேசம்: தஸ்லிமா நஸ்ரின் ஆவேசம்

Updated : அக் 20, 2021 | Added : அக் 20, 2021 | கருத்துகள் (36)
Share
Advertisement
புதுடில்லி : ''பயங்கரவாதிகளின் கூடாரமாகி விட்டது வங்கதேசம்; அங்கு ஹிந்துக்களுக்கு எதிரான போக்கு அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது,'' என, பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கூறியுள்ளார். வங்கதேசத்தைச் சேர்ந்தவர் பிரபல பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், ௫௮. முஸ்லிம் மதத்தை பற்றி விமர்சித்து எழுதியதால் வங்கதேசத்துக்குள் நுழைய அந்நாட்டு அரசு அவருக்கு தடை


புதுடில்லி : ''பயங்கரவாதிகளின் கூடாரமாகி விட்டது வங்கதேசம்; அங்கு ஹிந்துக்களுக்கு எதிரான போக்கு அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது,'' என, பிரபல எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் கூறியுள்ளார்.



latest tamil news




வங்கதேசத்தைச் சேர்ந்தவர் பிரபல பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், ௫௮. முஸ்லிம் மதத்தை பற்றி விமர்சித்து எழுதியதால் வங்கதேசத்துக்குள் நுழைய அந்நாட்டு அரசு அவருக்கு தடை விதித்துள்ளது. இதனால் பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வசித்து வருகிறார். அவருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வங்க தேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறை பற்றி தஸ்லிமா நஸ்ரின் கூறியதாவது:பயங்கரவாதிகளின் கூடாரமாக வங்கதேசம் மாறி விட்டது. அங்கு மதரசாக்கள், பயங்கரவாதத்தை பரப்பும் மையமாக செயல்பட்டு வருகின்றன. அரசியல் லாபத்துக்காக மதத்தை அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா அரசு பயன்படுத்தி வருகிறது.

வங்கதேசத்தில் ஹிந்துக்களும், பவுத்தர்களும் மூன்றாம் தர குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். ஹிந்துக்களுக்கு எதிரான போக்கு அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது. பிரிவினையின் போது வங்கதேசத்தில் ௩௦ சதவீதம்பேர் ஹிந்துக்களாக இருந்தனர். இப்போது ஹிந்துக்களின் சதவீதம் 9 ஆக குறைந்து விட்டது. துர்கா பூஜை காலத்திலோ அல்லது முடிந்த பின்போ ஹிந்துக்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படும் அபாயம் உள்ளது, ஷேக் ஹசீனாவுக்கு தெரியும். ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு அளிக்க, அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news




அமெரிக்கா கண்டனம்

வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக நடந்த தாக்குதல் பற்றி, அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் கூறியதாவது:மத சுதந்திரம், நம்பிக்கை ஆகியவை மனிதர்களின் அடிப்படை உரிமை. இதை பறிக்க யாருக்கும் உரிமையில்லை. வங்கதேசத்தில் சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் கவலையும், வருத்தமும் அளிக்கின்றன. ஹிந்துக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வங்கதேச அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (36)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
21-அக்-202104:37:03 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும், உருப்படாதுன்னு சொல்லுவாங்க.. அந்த லிஸ்டில நம்ம ஜீ போயிட்டு வந்த நாடும்ன்னு சேர்த்துக்கலாம்.
Rate this:
Cancel
DVRR - Kolkata,இந்தியா
20-அக்-202116:41:38 IST Report Abuse
DVRR இது முற்றிலும் தவறு. முஸ்லிம்கள் எங்கிருந்தாலும் அது பயங்கரவாதிகளின் கூடாரம் என்று சொல்லவேண்டும் தஸ்லிமா நஸ்ரின்
Rate this:
Cancel
Kumar - Madurai,இந்தியா
20-அக்-202115:45:48 IST Report Abuse
Kumar 90 களில் பங்காளதேஷில் நடந்த உண்மைகளை மட்டுமே அவர் கூறி உள்ளார். மத ரீதியாக கொலைகள்,குண்டு வெடிப்புகளை உலகம் முழுவதும் நடத்த வேண்டியது. அதை எதிர்த்தால் அவர்களையும் கொல்ல வேண்டியது.திருப்பு அடித்தால் பின் குஜராத்,உபினு கதற வேண்டியது. வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X