பொது செய்தி

தமிழ்நாடு

விதிமீறல் கட்டடங்களுக்கு 'கிடுக்கி'; விளக்கம் கேட்டு சி.எம்.டி.ஏ., அதிரடி 'நோட்டீஸ்!'

Updated : அக் 21, 2021 | Added : அக் 20, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
சென்னை : சென்னை, ராயப்பேட்டை சத்யம் தியேட்டர் வளாகம் உள்ளிட்ட, 35 விதிமீறல் கட்டடங்களுக்கு, 'சீல்' வைப்பதற்கான 'நோட்டீஸ்'களை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் அனுப்பியுள்ளனர்.சென்னையில், 2007 ஜூலைக்கு முன் கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்களை வரன்முறை செய்வதற்கான திட்டம், 2017ல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 2007 ஜூலைக்கு பின் கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்கள் மீது, சட்ட ரீதியாக
விதிமீறல், கட்டடங்கள், சி.எம்.டி.ஏ, நோட்டீஸ்,

சென்னை : சென்னை, ராயப்பேட்டை சத்யம் தியேட்டர் வளாகம் உள்ளிட்ட, 35 விதிமீறல் கட்டடங்களுக்கு, 'சீல்' வைப்பதற்கான 'நோட்டீஸ்'களை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் அனுப்பியுள்ளனர்.

சென்னையில், 2007 ஜூலைக்கு முன் கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்களை வரன்முறை செய்வதற்கான திட்டம், 2017ல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 2007 ஜூலைக்கு பின் கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்கள் மீது, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க சி.எம்.டி.ஏ.,வுக்கு எவ்வித தடையும் இல்லை.ஆனால் விதிமீறல் புகார்களை, மாநகராட்சிக்கும், பிற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் திருப்பிவிடுவதையே சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் வழக்கமாக வைத்துள்ளனர்.


latest tamil news


ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், விதிமீறல் கட்டடங்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, சி.எம்.டி.ஏ.,வுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால், சிறிய அளவில் புகார்கள் வந்தாலும், உடனடியாக நோட்டீஸ் அனுப்பும் பணியில் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நடப்பாண்டில் ஜன., முதல் அக்., வரை, 35 கட்டடங்களுக்கு சீல் வைப்பதற்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

ராயப்பேட்டை சத்யம் திரையரங்க வளாகத்தில், மூன்று, நான்கு, ஐந்தாவது தளங்கள் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாக வந்த புகார் அடிப்படையில், சி.எம்.டி.ஏ., நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆனால், இந்த கட்டடத்தில் உள்ள விதி மீறல்களை வரன்முறை செய்ய கோரி, ஏற்கனவே விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. வரன்முறை விண்ணப்பம் காரணமாக, சத்யம் வளாகத்துக்கு வழங்கப்பட்ட நோட்டீஸ் திருப்பி பெறப்பட வாய்ப்புள்ளதாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையும் சேர்த்து, நான்கு ஆண்டுகளில், 76 கட்டடங்களுக்கு சி.எம்.டி.ஏ., நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இதற்கு விளக்கம் அளிக்காவிட்டால், சம்பந்தப்பட்ட கட்டடங்களுக்கு 'சீல்' வைக்கப்படும் என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.


76 கட்டடங்களுக்கு 'நோட்டீஸ்'


சென்னையில் நான்கு ஆண்டுகளில் நோட்டீஸ் வழங்கப்பட்ட கட்டடங்கள் எண்ணிக்கை:


ஆண்டு - கட்டடங்கள் எண்ணிக்கை
2018 - 21
2019 - 15
2020 - 5
2021 - 35


35 கட்டடங்கள் நிலவரம் என்ன?


விதிமீறல் இருப்பதாக, ஜன., முதல் அக்., வரை சி.எம்.டி.ஏ., நோட்டிஸ் அளித்துள்ள 35 கட்டடங்கள் விபரம்:


latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
21-அக்-202108:30:16 IST Report Abuse
M S RAGHUNATHAN இதெல்லாம் சும்மா புருடா. தீபாவளி வசூல் வாங்க அரசு செய்யும் உருட்டல்.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
21-அக்-202107:45:13 IST Report Abuse
D.Ambujavalli மாறிமாறி வரும் ஆளும் கட்சிகளுக்கும் , ஒவ்வொருமுறையும் அவர்கள் உத்தரவை 'செயல் படுத்தும்' விசுவாச அதிகாரிகளுக்கும் அவ்வப்பொழுது 'வாய்க்கரிசி' போட்டு அடக்கிவிட்டால் ஆயிற்று, ஐம்பத்தென்ன, ஐந்நூறு ஆண்டுகளானாலும் ஒரு செங்கல்லைக்கூட பேர்க்கமாட்டார்கள்
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
21-அக்-202107:10:34 IST Report Abuse
Kasimani Baskaran ஆட்சி மாறியவுடன்தான் சிஎம்டிஏ வேலை செய்கிறதா அல்லது வசூல் செய்ய முயற்சிக்கிறார்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X