பொது செய்தி

இந்தியா

ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பை எட்டிய ஐ.ஆர்.சி.டி.சி.,

Updated : அக் 20, 2021 | Added : அக் 20, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி : ஐ.ஆர்.சி.டி.சி., எனும், இந்திய ரயில்வே சுற்றுலா மற்றும் உணவு கழகத்தின் சந்தை மதிப்பு, நேற்று 1 லட்சம் கோடி ரூபாயை தொட்டது.இதையடுத்து, 1 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டிய ஒன்பதாவது பொதுத்துறை நிறுவனமாக ஐ.ஆர்.சி.டி.சி., உயர்ந்துள்ளது.நேற்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தின் இடையே, இந்நிறுவன பங்கின் விலை, மும்பை பங்குச்சந்தையில் 6,393 ரூபாய் என்ற இதுவரை இல்லாத

புதுடில்லி : ஐ.ஆர்.சி.டி.சி., எனும், இந்திய ரயில்வே சுற்றுலா மற்றும் உணவு கழகத்தின் சந்தை மதிப்பு, நேற்று 1 லட்சம் கோடி ரூபாயை தொட்டது.



latest tamil news


இதையடுத்து, 1 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டிய ஒன்பதாவது பொதுத்துறை நிறுவனமாக ஐ.ஆர்.சி.டி.சி., உயர்ந்துள்ளது.நேற்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தின் இடையே, இந்நிறுவன பங்கின் விலை, மும்பை பங்குச்சந்தையில் 6,393 ரூபாய் என்ற இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியது. இதையடுத்து, நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1.1 லட்சம் கோடி ரூபாயை தொட்டது.

இதற்கு முன்பாக, 'எஸ்.பி.ஐ., கோல் இந்தியா, என்.எம்.டி.சி., இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பவர் கிரிட் கார்ப்பரேஷன், எஸ்.பி.ஐ., லைப் இன்சூரன்ஸ்.'பாரத் பெட்ரோலியம், எஸ்.பி.ஐ., கார்ட்ஸ்' ஆகிய நிறுவனங்கள், 1 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டிஉள்ளன.இருப்பினும், நேற்று வர்த்தக இறுதியில், இந்நிறுவன பங்கின் விலை 5,363 ரூபாயாக சரிவை கண்டது.


latest tamil news



இதன் தொடர்ச்சியாக சந்தை மதிப்பும், 85 ஆயிரத்து, 808 ரூபாயாக குறைந்தது.ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம், கடந்த 2019ம் ஆண்டு, அக்டோபர் 14ம் தேதியன்று தன்னுடைய பங்குகளை சந்தையில் பட்டியலிட்டது. அப்போது ஒரு பங்கின் விலை 320 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதிலிருந்து இதுவரை இப்பங்கின் விலை, கிட்டத்தட்ட 1,737 சதவீதம் உயர்ந்துள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் 308 சதவீதம் அளவுக்கு விலை உயர்ந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chennai sivakumar - chennai,இந்தியா
20-அக்-202113:18:27 IST Report Abuse
chennai sivakumar Adichaanga lucky prize
Rate this:
Cancel
20-அக்-202111:17:59 IST Report Abuse
ஆரூர் ரங் ஓரளவு மட்டுமே சாதாரண பங்குதாரர் களுக்கு விற்றுள்ளனர். அதை😒 வாங்கிய நடுத்தர மக்கள் ஒரே ஆண்டில் 4 மடங்குக்கு மேல் லாபம் அடைந்துள்ளனர். பெரும்பாலானவர்கள் ரயில்வே ஊழியர்களை விட சாதாரணமானவர்கள். முழுவதும் தனியார் மயமாக்கல் நடந்தால் சேவை மேம்படும் .
Rate this:
Cancel
20-அக்-202107:58:38 IST Report Abuse
அப்புசாமி டிக்கெட் கேன்சல் செஞ்சாலே 50 பர்செண்ட் காசை உருவுடறானுங்க. பெஷல் ரயில்னு உட்டு கட்டணக் கொள்ளை. பொதுத்துறை, சேவை எல்லாம் மறந்து போச்சு. உருவறது மட்டுமே தொழிலா இருந்தா, லட்சம் கோடி என்ன? சீக்கிரம் 10 லட்சம் கோடியாகிடும்.
Rate this:
தமிழன் - madurai,இந்தியா
20-அக்-202109:30:52 IST Report Abuse
தமிழன்என்ன கூவி என்ன பண்ண? சந்தை மதிப்பு ஒசந்து போச்சே பாஸ்?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X