ஆந்திர முதல்வர் குறித்து அவதூறு; தெலுங்கு தேச கட்சி அலுவலகம் சூறை

Updated : அக் 20, 2021 | Added : அக் 20, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
விஜயவாடா: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததை கண்டித்து, தெலுங்கு தேச கட்சியின் மத்திய அலுவலகம், மூத்த தலைவர்களின் வீடுகள் மீது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.தெலுங்கு தேச கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான பட்டாபி ராம், செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி
TDP, Offices, Leaders Houses, Attacked, Furniture Damaged, தெலுங்கு தேசம், அலுவலகம், ஆந்திரா, சூறை

விஜயவாடா: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததை கண்டித்து, தெலுங்கு தேச கட்சியின் மத்திய அலுவலகம், மூத்த தலைவர்களின் வீடுகள் மீது ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

தெலுங்கு தேச கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான பட்டாபி ராம், செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசுகையில், ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் மங்களகிரி பகுதியில் உள்ள தெலுங்கு தேச கட்சியின் மத்திய அலுவலகத்திற்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.


தெலுங்கு தேச கட்சி ஆபிஸ் சூறை ஜெகன் ஆதரவாளர் கொதிப்பு ........

latest tamil news



மேலும், விசாகப்பட்டினம், அமராவதியில் உள்ள கட்சி அலுவலகங்களும், மூத்த தலைவர்களின் வீடுகளும் சூறையாடப்பட்டன. இதனால், மாநிலம் முழுவதும் தெலுங்கு தேச கட்சியினருக்கும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.


latest tamil news


பிரச்னைகளை கட்டுப்படுத்தும் விதமாக பல இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், தாக்குதல் நடத்தியவர்கள் மீதும், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசியவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர மாநில டிஜிபி உறுதியளித்துள்ளார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
20-அக்-202116:51:43 IST Report Abuse
DVRR கிறித்துவ ஜெகன் மோகன் ரெட்டி அரசில் அப்படித்தான் நடக்கும்
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
20-அக்-202114:07:42 IST Report Abuse
Duruvesan சந்திர பாபு ரொம்ப ஆடினார், கடவுள் ஆப்பு வைத்து விட்டார், இதே தான் கர்த்தரின் seedan ஸ்டாலின்,ஜெகன் மோகன், ராகுல், mamata ஆகியோருக்கும் வரும்
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
20-அக்-202113:14:23 IST Report Abuse
Ramesh Sargam தமிழகத்தில் எப்படி திமுக, அதிமுக வோ அங்கே, அந்த இரண்டு கட்சிகள். இரண்டும் ஒருத்தறுக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல - ஊழல் செய்வதிலும், குண்டர்களை வைத்து அரசியல் செய்வதிலும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X