பொது செய்தி

தமிழ்நாடு

பருவமழை நாட்கள் குறையும்; அளவு குறையாது: வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் கணிப்பு

Updated : அக் 20, 2021 | Added : அக் 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வடகிழக்குப் பருவமழை சராசரி அளவுக்கு குறையாமல் பெய்யும்; கடலோர மாவட்டங்களுக்கு அதிகமான மழை கிடைக்கும் என, தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.ஜூனில் துவங்கி செப்டம்பரில் முடியும் தென்மேற்குப் பருவமழையில் 300 மி.மீ.,, அக்டோபரில் துவங்கி டிசம்பரில் முடியும் வடகிழக்குப் பருவமழையில் 440 மி.மீ., வரை, தமிழகத்தில் மழை பெய்கிறது. இந்த ஆண்டில்,
பருவமழை, வேளாண், காலநிலை ஆராய்ச்சி மையம், கணிப்பு

வடகிழக்குப் பருவமழை சராசரி அளவுக்கு குறையாமல் பெய்யும்; கடலோர மாவட்டங்களுக்கு அதிகமான மழை கிடைக்கும் என, தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.

ஜூனில் துவங்கி செப்டம்பரில் முடியும் தென்மேற்குப் பருவமழையில் 300 மி.மீ.,, அக்டோபரில் துவங்கி டிசம்பரில் முடியும் வடகிழக்குப் பருவமழையில் 440 மி.மீ., வரை, தமிழகத்தில் மழை பெய்கிறது. இந்த ஆண்டில், வடகிழக்குப் பருவமழை இன்று (அக்.,20) துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தென் மேற்குப் பருவமழையே அக்டோபரிலும் தொடர்ந்துள்ளது. இதனால் வடகிழக்குப் பருவமழை துவங்குவதற்கு மேலும் சில நாட்களாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர் ராமநாதன் நமது நிருபரிடம் கூறியதாவது: தென்மேற்குப் பருவமழை, ஜூன் 3ம் தேதி துவங்கியது. எல்லா மாவட்டங்களிலும் வழக்கத்தை விட 10 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சராசரி மழையை விட, 20-30 சதவீதம் மழை குறைவாகப் பெய்துள்ளது.செப்டம்பரை தாண்டியும் அக்., வரையிலும் தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து கொண்டிருக்கிறது. வடகிழக்கு பருவமழைதான் தமிழகத்துக்கு முக்கியமான மழைக்காலம்.

தமிழ்நாடு வேளாண் பல்கலையின் காலநிலை ஆராய்ச்சி மையம், 'ஆஸ்திரேலியன் ரெயின்மேன்' என்ற மென்பொருளைக் கொண்டு, பருவமழையைக் கணிக்கிறது. வடகிழக்குப் பருவமழை இன்னும் ஒரு வாரம் தள்ளிப்போகுமென்று தெரிகிறது.தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சராசரிக்குக் குறையாமல் வடகிழக்குப் பருவமழை கிடைக்கும். சென்னை, திருவள்ளூர், கடலுார், நாகப்பட்டினம் உள்ளிட்ட 10 கடலோர மாவட்டங்களில் சராசரிக்கும் அதிகமாக மழை பெய்யும்.


latest tamil news




பொதுவாக 2.5 மி.மீ., மழை பெய்தால் அது மழை நாளாகக் கணக்கிடப்படும். தமிழகத்தில் ஆண்டுக்கு 42-45 நாள் மழை நாளாக இருக்க வேண்டும். இந்த அளவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து கொண்டிருக்கிறது. வரும் நாட்களில் மழையளவு குறையாது. ஆனால் மழை பெய்யும் நாட்கள் குறையும். 10 நாட்களில் பெய்ய வேண்டிய மழை, ஐந்து நாட்களில் பெய்யும் போது, மழை நீரை சேகரிக்க முடியாது. விவசாயிகள் பண்ணைக்குட்டைகள் போன்ற கட்டமைப்புகளை அமைத்துக்கொள்வது நல்லது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.


'புயலை முன்பே கணிக்க முடியாது'



''கடலின் மீதான காற்றழுத்தத்துக்கும், நிலப்பரப்பின் மீதான காற்றழுத்தத்துக்குமான வித்தியாசம்தான் புயலாக உருவெடுக்கிறது. பொதுவாக வடகிழக்குப்பருவமழைக் காலத்தில் தான் புயல் அதிகமாக இருக்கும். அதில்தான் அதிகமான மழையும் தமிழகத்துக்குக் கிடைக்கும். ஜூனிலிருந்து செப்டம்பர் வரை புயல் இருக்காது. வங்காள விரிகுடாவில் நான்கு புயல் ஏற்பட்டால், அரபிக்கடலில் ஒரு புயல் ஏற்படும். தாழ்வு மண்டலம் உருவாவதைப் பொறுத்து, அதையொட்டிய காலத்தில்தான் புயல்களைக் கணிக்க முடியும்,'' என, பேராசிரியர் ராமநாதன் தெரிவித்தார்.


பருவநிலை மாற்றத்தின் விளைவு!



வழக்கமாக செப்., இறுதியில் முடிவடையும் தென்மேற்குப் பருவமழை, இந்த ஆண்டு அக்., மூன்றாவது வாரம் வரையிலும் தொடர்ந்துள்ளது. வடகிழக்குப் பருவமழை என்பது டிசம்பரில் முடிவடையும். ஆனால் கடந்த ஆண்டில் ஜன., 19 வரை வடகிழக்குப் பருவமழை நீடித்ததால், டெல்டா மாவட்டங்களில் பொங்கலை ஒட்டி நடக்கும் அறுவடையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.பருவமழை உரிய காலத்தைத் தாண்டிப் பெய்வதும், குறைந்த நாட்களில் அதிகமான மழை பெய்வதும் பருவநிலை மாற்றத்தின் விளைவு என்பதுதான் ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
-lநமது சிறப்பு நிருபர்-

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
20-அக்-202119:08:00 IST Report Abuse
NicoleThomson கடைசியில் அடிவாங்குவது விவசாயிகள் தான் , அரசியல்வாதிகளும் தரகர்களும் இடையில் வந்து கொள்ளையடித்து போவார்கள் , அவர்களுக்கு மழையாவது வெய்யிலாவது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X