பொது செய்தி

இந்தியா

கூகுள் பிக்சல் 6 ஸ்மார்ட்போன் முன்பதிவில் முண்டியடித்த வாடிக்கையாளர்கள்; முடங்கிய கூகுள் ஸ்டோர்

Added : அக் 20, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: நேற்று (அக்.,19) முதல் கூகுள் பிக்சல் 6 ஸ்மார்ட்போனின் முன்பதிவு துவங்கிய நிலையில், ஒரே நேரத்தில் பலரும் முன்பதிவு செய்ய கூகுள் ஸ்டோர் இணையதளத்திற்கு சென்றதால், சுமார் 5 மணிநேரம் அந்த இணையப்பக்கம் முடங்கியது.மொபைல் போன் நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனுடன் போட்டியிடும் வகையில் கூகுள் நிறுவனம் பிக்சல் 6 வகை ஸ்மார்ட்போன்களை
Pixel6, Google Store, Crashes, Rollout, Google Pixel 6, SmartPhone, கூகுள் பிக்சல் 6, ஸ்மார்ட்போன், முன்பதிவு, இணையதளம், முடக்கம்

புதுடில்லி: நேற்று (அக்.,19) முதல் கூகுள் பிக்சல் 6 ஸ்மார்ட்போனின் முன்பதிவு துவங்கிய நிலையில், ஒரே நேரத்தில் பலரும் முன்பதிவு செய்ய கூகுள் ஸ்டோர் இணையதளத்திற்கு சென்றதால், சுமார் 5 மணிநேரம் அந்த இணையப்பக்கம் முடங்கியது.

மொபைல் போன் நிறுவனங்களில் முன்னணியில் இருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோனுடன் போட்டியிடும் வகையில் கூகுள் நிறுவனம் பிக்சல் 6 வகை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் போன்கள் கூகுளின் இன்-ஹவுஸ் டென்சர் எஸ்.ஒ.சி மற்றும் டெலிபோட்டோ ஜூம் லென்ஸ் (4x) உள்ளடக்கிய புதுப்பிக்கப்பட்ட கேமரா அமைப்பை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை கொண்டுள்ள கூகுள் பிக்சல் 6 மாடலின் விலை இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.56 ஆயிரம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.


latest tamil news


கூகுள் பிக்சல் 6 மற்றும் கூகுள் பிக்சல் 6 ப்ரோ என இரு ஸ்மார்ட் போன்களின் முன்பதிவு நேற்று (அக்.,19) முதல் கூகுள் ஸ்டோரில் துவங்கியது. இதனால், உலகெங்கிலும் இருந்து பலரும் ஒரே நேரத்தில் கூகுள் ஸ்டோரில் முன்பதிவு செய்ததால், அந்த இணையதளமே முடங்கியது. முன்பதிவு செய்த பலருக்கும் கூகுளிடம் இருந்து முறையான தகவல்கள் வந்து சேரவில்லை. இதனால், வாடிக்கையாளர்கள் குழப்பமடைந்தனர். சுமார் 5 மணிநேரத்திற்கு இணையதளம் முடங்கியதால், பயனர்கள் ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்ய முடியாமல் தவித்தனர். இது குறித்து கூகுள் தரப்பில், சிரமத்திற்கு மன்னிப்புக் கோரியதுடன், கூகுள் ஸ்டோர் தற்காலிகமாக செயலிழந்ததாகவும், தற்போது சரிசெய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
20-அக்-202119:08:32 IST Report Abuse
NicoleThomson அவ்ளோ கேவலமாவா இருக்காங்க சர்வர் அட்மினிஸ்ட்ரடோர்ஸ்?
Rate this:
Cancel
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
20-அக்-202116:02:50 IST Report Abuse
SENTHIL NATHAN இந்தியா ஒரு தங்க பறவை
Rate this:
Cancel
Yezdi K Damo - Chennai,சிங்கப்பூர்
20-அக்-202112:12:05 IST Report Abuse
Yezdi K Damo இந்தியாவுல எல்லார்கிட்டயும் நிறைய பணம் இருக்கு போல இருக்கு . நிர்மலாஜி நோட் பண்ண வேண்டிய விஷயம் இது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X